இயக்குநர் எம். செல்வக்குமார் இக்கத்தில் நடிகர் அருள்நிதி நாயகனாக நடிக்கும் “வேட்ட சாமி” திரைப்படத்தின் முதல்பார்வை வீடியோ வெளியிடப்பட்டுள்ளது.

நடிகர்கள் அமீர், ஆடுகளம் நரேன், மதுசூதன் ராவ், ஹரீஷ் பேராடி, விஜி சந்திரசேகர், இந்துமதி மணிகண்டன், மைனா நந்தினி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ள இந்தப் படத்துக்கு ஜிப்ரான் இசையமைத்துள்ளார். இந்த நிலையில், தெய்வீகக் கதைகளத்தில் உருவாகி வரும் “வேட்ட சாமி” படத்தின் முதல் பார்வை கிளிம்ஸ் விடியோவை இயக்குநர் ஆர்.ஜே. பாலாஜி வெளியிட்டுள்ளார்.