தூத்துக்குடி அண்ணா நகர் 3-வது தெருவைச் சேர்ந்தவர் பெருமாள் மகன் கலைச்செல்வன் (84). இவர் கடந்த 15ஆம் தேதி அமெரிக்கன் மருத்துவமனை அருகே சைக்கிளில் சென்று கொண்டிருந்தபோது, எதிர்பாராதவிதமாக சைக்கிளிலிருந்து தானாகக் கீழே விழுந்து விபத்துக்குள்ளானார்.

அப்பகுதியினர் அவரை மீட்டு உடனடியாகத் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி நேற்று பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து வடபாகம் காவல் நிலையப் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.