தூத்துக்குடி, அண்ணாநகரில் தனியார் கோல்டு பைனான்ஸ் நிறுவனம் உள்ளது. இங்கு அப்பகுதியைச் சேர்ந்த பெண்கள், மூதாட்டிகள் நகைகளை அடகு வைத்து பணம் பெற்றனர். அதற்கு வட்டியும் செலுத்தியதாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில், திடீரென நிறுவனத்தை நடத்தி வந்த தம்பதி நிறுவனத்தை பூட்டிவிட்டு தலைமறைவாகி விட்டனர். இதையடுத்து, பாதிக்கப்பட்ட பெண்கள் தங்களது நகைகளை மீட்டுத் தரக் கோரி தூத்துக்குடி எஸ்பி அலுவலகத்தில் நேற்று புகார் அளித்தனர். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி, தம்பதியைத் தேடி வருகின்றனர்.