வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு, மழைநீரைச் சேகரிக்க வலியுறுத்திப் பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்ற தமிழக முதல்வரின் அறிவிப்பினைத் தொடர்ந்து கோவில்பட்டியில் துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டன.

தமிழகத்தில் பெய்து வரும் வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு, மழைநீரைச் சேகரிக்க வலியுறுத்திப் பொதுமக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தி அதனை மக்கள் இயக்கமாகச் செயல்படுத்த வேண்டும் என்று தமிழக முதல்வர் ஜோசப் விஜய் அறிவித்தார்.

தமிழக அரசின் அறிவிப்பினைத் தொடர்ந்து, கோவில்பட்டியில் ரோட்டரி சங்கம் சார்பில் மழைநீர் சேகரிப்பு குறித்த விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டன.

இந்நிகழ்ச்சிக்கு கோவில்பட்டி ரோட்டரி சங்கத் தலைவர் முத்து முருகன் தலைமை தாங்கினார். சங்க நிர்வாகிகள் சீனிவாசன், முத்துச்செல்வம், நடராஜன் ஆகியோர் நேரில் சென்று பொதுமக்களிடம் மழைநீர் சேகரிப்பு அவசியத்தையும், மழைநீரைச் சேமிக்கும் முறைகள் குறித்தும் விளக்கும் விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை வழங்கினர்.