தென்மேற்கு வங்கக் கடல் மற்றும் அதனை ஒட்டிய தமிழ்நாடு கடற்கரைப் பகுதியில் காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி உருவானது. இதன் காரணமாக அடுத்தடுத்த நாட்களில் தமிழ்நாட்டில் பல இடங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், மற்றொரு காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி நாளை மறுநாள் உருவாக வாய்ப்பு இருப்பதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதனை தொடர்ந்து, தமிழ்நாட்டில் அக்.21, 22 தேதிகளில் 12 செ.மீ முதல் 20 செ.மீட்டர் வரை மிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளதால் இந்திய வானிலை ஆய்வு மையம் ஆரஞ்சு அலர்ட் விடுத்துள்ளது. இன்று முதல் 7 நாட்களுக்கு ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரிக்கு இன்று ஆரஞ்ச் அலர்ட்'
மேற்கு வங்ககடல் மற்றும் அதனை ஒட்டிய தமிழ்நாடு கடற்கரைப் பகுதியில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுதல் காற்றழுத்தத் தாழ்வு பகுதி உருவாக கூடும் என வானிலை ஆய்வு மையம் ஏற்கனவே தெரிவித்திருந்த நிலையில்,தமிழ்நாட்டின் கடலோர பகுதிகளில் காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவானது. தென்கிழக்கு, அதனை ஒட்டிய மத்திய கிழக்கு வங்கக் கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகிறது
இதன் தாக்கத்தால், அக்டோபர் 23ஆம் தேதி வாக்கில் தென்கிழக்கு மற்றும் அதை ஒட்டிய மத்திய கிழக்கு வங்ககடல் பகுதியில் ஒரு காற்றழுத்தப் தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளதாகவும், பின்னர் அது வடமேற்கு திசையில் நகர்ந்து, அடுத்த 3 நாட்களில் மேலும் வலுப்பெற வாய்ப்புள்ளதாகவும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

