இயக்குநர் பி.எஸ். மித்ரன் இயக்கத்தில் நடிகர் கார்த்தி நாயகனாக நடித்து கடந்த 2022 ஆம் ஆண்டு வெளியான சர்தார் படம் நல்ல வரவேற்பைப் பெற்றது. இதையடுத்து, மீண்டும் இந்திய உளவாளி பற்றிய கதையாக எழுதப்பட்டுள்ள சர்தார் 2 படத்தில், நடிகர் எஸ்.ஜே. சூர்யா வில்லனாக நடித்துள்ளார்.

இந்தப் படத்தில் நடிகர்கள் மாளவிகா மோகனன், ஆஷிகா ரங்கநாத், யோகிபாபு மற்றும் ரஜீஷா விஜயன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.