தூத்துக்குடி தூய மரியன்னை கல்லூரியின் மனித உரிமை மன்றம் சார்பில் சிறப்புப் பட்டிமன்றம் கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது. எம்பவர் இந்தியா செயல் இயக்குநர் ஆ. சங்கர் நடுவராகப் பங்கேற்று வெற்றி பெற்ற மாணவிகளுக்குப் பரிசுகளை வழங்கினார்.
'பெண்கள் பாதுகாப்பு சட்டத்தின் கடமையா அல்லது சமூகப் பொறுப்பா?' என்ற தலைப்பில் நடைபெற்ற இப்பட்டிமன்றத்திற்கு எம்பவர் இந்தியா செயல் இயக்குநர் ஆ. சங்கர் நடுவராகக் கலந்து கொண்டார்.
இதில் 'சட்டத்தின் கடமையே' என்ற தலைப்பில் கண்காணிப்பாளர் ரோஸ்வென்ஸ் தலைமையில் லதா, ராஜேஸ்வரி, ஸ்ரேயா ஆகியோரும், 'சமூகப் பொறுப்பே' என்ற தலைப்பில் சுமதி தலைமையில் புலோமின் ரெஜி, பிரிசில்லா டெல்பி, மரியா சனூஜா ஆகியோரும் பங்கேற்றுத் தங்களது கருத்துகளைச் சிறப்பாக வாதிட்டனர்.
நிகழ்ச்சியின் நிறைவில் வெற்றி பெற்று பரிசு பெற்ற மாணவிகளுக்கு எம்பவர் இந்தியா செயல் இயக்குநர் ஆ. சங்கர் பரிசுகளை வழங்கிப் பாராட்டினார்.
இந்நிகழ்வில் கல்லூரியின் செயலர் குழந்தை தெரேஸ், முதல்வர் சிபானா, துணை முதல்வர் எழிலரசி, ஆரோக்கிய ஜென்சியஸ் அல்போன்ஸ் ஆகியோர் கலந்துகொண்டனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை சோனி, மேரி வினோ லோபா, ஸ்ரீ இருதய சகாய லான்சி ஆகியோர் சிறப்பாகச் செய்திருந்தனர். இதில் கல்லூரியின் மாணவிகள் திரளாகக் கலந்துகொண்டனர்.

