நீலகிரி மாவட்டம், உபதலை பேரூராட்சிக்கு உட்பட்ட பழத்தோட்டம் கிராமத்தில், தமிழ்நாடு பத்திரிக்கையாளர் சங்கம் மற்றும் கோவை பிஎஸ்ஜி மருத்துவமனை சார்பில் இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது.

இந்முகாமில் தமிழ்நாடு பத்திரிகையாளர் சங்கத்தின் மாநில தலைவர் டி.எஸ்.ஆர். சுபாஷ் சிறப்புரையாற்றினார். மேலும், உதவி வனப்பாதுகாவலர் கிருபாகாரன், உதகை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வர் சீனிவாசன் மற்றும் காவல் துறை ஆய்வாளர்கள் கவிதா, பர்வீனா ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாகக் கலந்துகொண்டனர்.

மருத்துவ முகாமைத் தொடர்ந்து அப்பகுதியில் மரம் நடும் விழாவும் நடைபெற்றது. விழாவிற்கு வருகை தந்த காவல் ஆய்வாளர்கள், மருத்துவக் கல்லூரி முதல்வர் மற்றும் வனத்துறை அதிகாரிகள் மரக்கன்றுகளை நட்டனர். மேலும், சிறப்பு அழைப்பாளராகக் கலந்துகொண்ட குன்னூர் சட்டமன்ற உறுப்பினர் கே.எம். ராஜு, மருத்துவ முகாம் சீராக நடைபெறுவதை ஆய்வு செய்து, மக்களுக்கு அதன் பயன்கள் குறித்துச் சிறப்புரையாற்றியதுடன் மரக்கன்றுகளையும் நட்டு வாழ்த்துக்களைத் தெரிவித்தார்.

tujTree.jpg

தேசிய குழு உறுப்பினர் கோவை மோகன்ராஜ் சீனிவாசன், மாநில அமைப்பு செயலாளர் சேலம் ஜி. காதர் ஷெரீப், கோவை எஸ். ராஜா ராமன் உள்பட பலரும் கலந்துகொண்டு சிறப்பித்தனர். இந்நிகழ்வுக்கான ஏற்பாடுகளைத் தமிழ்நாடு பத்திரிகையாளர் சங்கத்தின் நீலகிரி மாவட்டத் தலைவர் சகாயராஜா மற்றும் நிர்வாகிகள், ஊர் தலைவர் சுரேஷ் மற்றும் நிர்வாகிகள் சிறப்பாகச் செய்திருந்தனர்.