தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள ஆழ்வார்கற்குளம் கிராமத்தைச் சேர்ந்தவர் மாரியப்பன் மகன் இசக்கிராஜா (20) இவருக்கும் பக்கத்து விட்டு வசித்து வரும் நெல்லையப்பன் மகன்கள் ஆனந்த் மற்றும் ராஜ் ஆகியோர்களுக்கு இடையே நிலம் சம்பந்தமாக தகராறு இருந்து வந்ததாம்

நேற்று இரவு 9 மணி அளவில் இவர்களுக்குள் மீண்டும் ஏற்பட்ட தகராறில் ஆத்திரம் அடைந்த ஆனந்த் மற்றும் அவரது தம்பி ராஜு உள்பட 8பேர் சேர்ந்து இசக்கி ராஜாவை சரமாரியாக தாக்கி, அரிவாளால் வெட்டினார்களாம். இதில் ரத்த வெள்ளத்தில் அவர் அதே இடத்தில் பரிதாபமாக துடிதுடித்து இறந்தார். பின்னர் அந்த கும்பல் அங்கிருந்து தப்பி ஓடி விட்டது.

இதுகுறித்து தகவல் அறிந்த ஸ்ரீவைகுண்டம் காவல் நிலைய போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று அவரது உடலை மீட்டு பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது சம்பந்தமாக வழக்கு பதிவு செய்து அண்ணன், தம்பி உட்பட 8 பேரை தேடி வருகிறார்கள். இந்த கொலை சம்பவம் அந்த கிராமத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அசம்பாவிதங்களை தடுக்க அங்கு போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.