நாகர்கோவில் - சார்லபள்ளி இடையிலான சிறப்பு ரயில் சேவை நவம்பர் 13-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

தெலுங்கானா மாநிலம் ஐதராபாத் அருகே உள்ள சார்லபள்ளியில் இருந்து சென்னை எழும்பூர், நெல்லை வழியாக நாகர்கோவிலுக்கு சிறப்பு ரயில் (வண்டி எண் 07535) வாரத்தில் வெள்ளிக்கிழமை தோறும் இயக்கப்படுகிறது. இந்த மாதம் வரை மட்டுமே இயக்கப்படுவதாக இருந்த இந்த ரெயில் வருகிற 30-ந்தேதி முதல் நவம்பர் மாதம் 13-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டு உள்ளது.

அதே போல் நாகர்கோவில் சார்லபள்ளி சிறப்பு ரயில் (07536-ஞாயிற்றுக்கிழமை) வருகிற நவம்பர் மாதம் 1-ஆம் தேதி முதல் 15-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டு உள்ளதாக தெற்கு ரயில்வே முதன்மை மக்கள் தொடர்பு அலுவலர் நரேன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.