மாமன்னர் ராஜராஜ சோழனின் பிறந்த மற்றும் அரியணை ஏறிய ஐப்பசி சதய நட்சத்திரம் சதய விழாவாக ஆண்டுதோறும் இரண்டு நாட்கள் கொண்டாடப்படுவது வழக்கம். அதன்படி, ராஜராஜ சோழனின் 1041-வது சதய விழா தஞ்சை உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் சிறப்பான முறையில் கொண்டாடப்பட்டு வருகிறது.
இதன் ஒரு பகுதியாக, தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் பேருந்து நிலையம் முன்பு வாதிரியார் சமுதாயம் சார்பாக சோழப் பேரரசர் முப்பாட்டன் ராஜராஜ சோழனின் 1041-வது சதய விழா அலங்கரித்து வைக்கப்பட்டு விமரிசையாகக் கொண்டாடப்பட்டது.
இவ்விழாவிற்கு குணசேகர வாதிரியார் மற்றும் சுப்பிரமணிதேவர் ஆகியோர் தலைமை தாங்கினர். இதில் சிறப்பு விருந்தினராக விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்கண்டேயன் கலந்துகொண்டு ராஜராஜ சோழனின் திருவுருவப் படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார். இந்நிகழ்வில் சமுதாயப் பிரதிநிதிகளும் பொதுமக்களும் ஏராளமானோர் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

