குமரி - கேரளம் எல்லையான பாறசாலை அருகே ரயில் பாதையில் திடீரென மண்சரிவு ஏற்பட்ட நிலையில், பிலாஸ்பூர் - நெல்லை விரைவு ரயில் ஓட்டுநர் விழிப்புடன் செயல்பட்டு உடனடியாக ரயிலை நிறுத்தியதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.
கன்னியாகுமரி - கேரளம் எல்லையான பாறசாலை அருகே அமைந்துள்ள ரயில் பாதையில் திடீரென மண் சரிவு ஏற்பட்டது. இந்நிலையில், பிலாஸ்பூர் பகுதியில் இருந்து நெல்லை நோக்கி வந்து கொண்டிருந்த விரைவு ரயில் அப்பகுதியில் சென்றுகொண்டிருந்தது.
ரயில் பாதையில் மண்சரிவு ஏற்பட்டுள்ளதை இஞ்சின் ஓட்டுநர் உடனடியாகக் கவனித்து, விழிப்புணர்வுடன் ரயிலதிவிரைவாகப் பிரேக் பிடித்து ரயிலை நிறுத்த முயன்றார். இருப்பினும், எதிர்பாராதவிதமாக ரயிலின் இஞ்சின் மட்டும் தண்டவாளத்தில் இருந்து தடம் புரண்டது. ஓட்டுநரின் இந்தத் துரித செயலால், பயணிகள் யாருக்கும் எந்தவிதப் பாதிப்பும் ஏற்படாமல் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.
தகவலறிந்ததும் உடனடியாக மீட்பு ரயிலும், தொழில்நுட்பக் குழுவினரும் சம்பவ இடத்திற்கு வரவழைக்கப்பட்டு தண்டவாளத்தைச் சீரமைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இச்சம்பவம் காரணமாக அந்த வழியாக இயக்கப்படும் மூன்று ரயில்கள் அடுத்தடுத்த ரயில் நிலையங்களில் பாதுகாப்புக்காக நிறுத்தப்பட்டுள்ளன:
மதுரை - புனலூர் ரயில் பணகுடியில் நிறுத்தப்பட்டுள்ளது. தாம்பரம் - திருவனந்தபுரம் அமிர்த பாரத் ரயில்: நாங்குநேரியில் நிறுத்தப்பட்டுள்ளது. மேலும், இப்பாதையில் இயக்கப்பட வேண்டிய 7 ரயில்கள் காலதாமதமாக இயக்கப்படும் என ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. திடீர் மண்சரிவு மற்றும் ரயில் நிறுத்தத்தால் பயணிகள் பெரும் அவதிக்குள்ளாகினர்.

