தூத்துக்குடி மாவட்டம் கழுகுமமலை அம்பேத்கர் நகர் பகுதியைச் சேர்ந்த மாரியப்பன் மகன் காளிமுத்து (48). கட்டிடத் தொழிலாளியான இவர் வேலைக்குச் செல்லாமல் தினமும் குடித்துவிட்டு பலரையும் அவதூறாகப் பேசி வந்துள்ளார். இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு இரவு காளிமுத்து தனது வீட்டின் அருகே சாலையில் செல்வோரை அவதூறாகப் பேசியதாகக் கூறப்படுகிறது.

இதனை அவரது வீட்டின் எதிர்ப்புறம் இருக்கும் மாடசாமி மனைவி கீதா (32) மற்றும் அவரது தாயார் ஆனந்தம்மாள் ஆகியோர் தட்டிக் கேட்டுள்ளனர். இதில் ஆத்திரமடைந்த காளிமுத்து, கீதாவைச் சரமாரியாகத் தாக்கியுள்ளார். இத்தாக்குதலில் காயமடைந்த கீதாவை அவரது உறவினர்கள் சிகிச்சைக்காகக் கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

இதுகுறித்து கீதா அளித்த புகாரின் பேரில் கழுகுமலை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் தமிழ்செல்வன் வழக்குப்பதிவு செய்து, காளிமுத்துவை நேற்று மாலையில் கைது செய்தார்.