தமிழ் சினிமா முன்னணி இசையமைப்பாளர் அனிருத்தும், சன் குழுமத் தலைவர் கலாநிதி மாறனின் மகளும் ஐதராபாத் சன்ரைசர்ஸ் அணியின் நிர்வாகியுமான காவ்யா மாறனும் திருமணம் நவம்பர் 11-ஆம் தேதி கிரீஸ் நாட்டில் திருமணம் நடைபெறவுள்ளதாகவும், நவம்பர் 21-ஆம் தேதி சென்னையில் 5 நட்சத்திர ஓட்டலில் பிரம்மாண்ட வரவேற்பு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
அனிருத் ரவிச்சந்தர் மற்றும் காவ்யா மாறன் ஆகியோரது திருமண வரவேற்பு விழா குறித்த நிகழ்வுகள் தற்போது கவனம் பெற்று வருகின்றன. இந்நிலையில், சன் டிவி குழுமத் தலைவர் கலாநிதி மாறன், தமிழக முதலமைச்சர் சி. ஜோசப் விஜயை நேரில் சந்தித்துத் திருமண வரவேற்பு விழாவிற்கான அழைப்பிதழை வழங்கியுள்ளார்.
இந்தச் சந்திப்பின் போது கலாநிதி மாறனுடன் காவேரி கலாநிதி மற்றும் மணமகன் அனிருத் ரவிச்சந்தர் ஆகியோர் உடனிருந்தனர். முதலமைச்சரை நேரில் சந்தித்து அழைப்பிதழ் வழங்கும் இக்கூட்டமானது தற்போது அரசியல் மற்றும் சினிமா வட்டாரங்களில் பேசப்படும் முக்கிய நிகழ்வாக மாறியுள்ளது.

