கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரனார் தூத்துக்குடி துறைமுகத்திலிருந்து சுதேசி கப்பலை இயக்கிய தினத்தை 'இந்து வணிகர் தினமாக' இந்து வியாபாரிகள் நல சங்கம் கொண்டாடி வருகிறது. இதையொட்டி இன்று தூத்துக்குடி துறைமுகத்தில் உள்ள வ.உ.சி. உருவச்சிலைக்கு சங்கத்தின் மாநில ஒருங்கிணைப்பாளர் விபி ஜெயக்குமார் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இந்நிகழ்ச்சியில் இந்து முன்னணி மாநில இணை அமைப்பாளர் கேகே பொன்னையா சிறப்பு அழைப்பாளராகக் கலந்துகொண்டார்.

தூத்துக்குடி மாநகர் மாவட்டத் தலைவர் இசக்கி முத்துக்குமார், பாஜக மாநிலச் செயலாளர் முரளி, பாஜக ஊடகப் பிரிவு மாவட்டத் தலைவர் ஜெயக்குமார், இந்து முன்னணி மாவட்டச் செயலாளர் சரவணகுமார், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் பலவேசம், கவி சண்முகம், பழனியாண்டி, திருப்பதி வெங்கடேஷ், பாஜக ஆன்மீகப் பிரிவு மாவட்டத் தலைவர் ஓம் பிரபு, துணைத் தலைவர் ஐயப்பன், மகளிர் அணி மாவட்டத் தலைவி வெள்ளத்தாய் அன்னராஜ், இந்து முன்னணி மண்டலப் பொறுப்பாளர்கள் பாலமுருகன், ஆறுமுகம், பாஜக மேற்கு மண்டலப் பொதுச்செயலாளர் இசக்கித்துரை, வெங்கடேஷ் மற்றும் தொழிலதிபர் ஓ.எம். முருகன் யாதவ் உட்படப் பலர் பங்கேற்றனர்.