பணியிடங்கள்: மண்டலத் தலைவர் (ரீடெயில்) - 01, பிராந்தியத் தலைவர் - 05, ரிலேஷன்ஷிப் மேனேஜர் டீம் லீடு - 24, இன்வெஸ்ட்மெண்ட் ஸ்பெஷலிஸ்ட் - 09, இன்வெஸ்ட்மெண்ட் ஆபிசர் - 04, விபி வெல்த் - 91, ஏவிபி வெல்த் - 73 என மொத்தம் 207 பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளன.

கல்வித் தகுதி: பணியிடங்களுக்கு ஏற்ப அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்பு (Degree), எம்பிஏ (MBA) அல்லது முதுகலை டிப்ளமோ (PG Diploma) முடித்திருக்க வேண்டும். பணிகளுக்கு ஏற்றவாறு முன்னனுபவம் அவசியமாகும்.

வயது வரம்பு: பணியிடத்தைப் பொறுத்து 23 வயது முதல் 50 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

தேர்வு முறை: பெறப்படும் விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டுத் தகுதியான தேர்வர்கள் நேர்முகத் தேர்வுக்கு (Interview) அழைக்கப்படுவர். நேர்முகத் தேர்வு மதிப்பெண்கள் அடிப்படையில் தேர்ச்சி வழங்கப்படும்.

விண்ணப்பக் கட்டணம்: பொதுப் பிரிவினருக்கு ரூ.750 விண்ணப்பக் கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. எஸ்சி, எஸ்டி மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்குக் கட்டணம் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்கும் முறை: தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள் https://recruitment.sbi.bank.in/crpd-sco-2026-27-23/apply என்ற எஸ்பிஐ வங்கியின் அதிகாரப்பூர்வ இணையதள முகவரி வாயிலாக ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.