கன்னியாகுமரி மாவட்டம் ஆரல்வாய்மொழி சக்கரகிரி மலைக்குன்று அருகே சாலையில் அடையாளம் தெரியாத வாகனம் மோதி புனுகுப் பூனை எனப்படும் காட்டுப் பூனை ஒன்று உயிரிழந்தது. நேற்று மர்ம விலங்கால் தாக்கப்பட்டு மாடு இறந்ததாக கூறப்பட்ட அதே பகுதியில்தான் இந்த சம்பவமும் நிகழ்ந்துள்ளது.
விபத்தில் இறந்த காட்டுப் பூனையை பார்த்த பொதுமக்கள், அதனை சிறுத்தைக் குட்டி என தவறாக புரிந்து கொண்டதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. தகவலறிந்து விரைந்து வந்த வனத்துறையினர், இறந்தது சிறுத்தைக் குட்டி அல்ல, காட்டுப் பூனை தான் என பொதுமக்களுக்கு விளக்கம் அளித்தனர். பின்னர் காட்டுப் பூனையின் உடலை மீட்டு உடற்கூராய்விற்காக எடுத்துச் சென்றனர்.

