இரு குடும்பத்தினரின் முழு சம்மதத்துடனும் ஆசியுடனும் இந்தத் திருமணம் நடைபெற்றதாகக் கூறப்படுகிறது. இத்தம்பதிக்கு மலேசியக் கால்பந்து ரசிகர்கள், முன்னாள் சக விளையாட்டு வீரர்கள் மற்றும் விளையாட்டுப் பிரபலங்கள் இணைய வழியில் தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.
இவர்களது திருமணப் புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் பரவலாகப் பகிரப்பட்டு வைரலாகி வருகிறது. 1970 மற்றும் 1980-ஆம் ஆண்டுக் காலகட்டத்தில் மலேசியக் கால்பந்து அணியின் ('ஹரிமாவ் மலாயா') பொற்கால கட்டத்தில் விளையாடிய முன்னணி வீரர்களில் அப்தா அலிப் குறிப்பிடத்தக்கவராவார். 1980-ஆம் ஆண்டு மாஸ்கோ ஒலிம்பிக் போட்டிக்கு மலேசிய அணி தகுதி பெற இவர் முக்கியப் பங்காற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

