» செய்திகள் - விளையாட்டு » அரசியல்

உள்ளாட்சித் தேர்தலை நடத்தினால் கரோனா பாதிப்பு மிக மோசமடையும்: உயர்நீதிமன்றத்தில் மனு!

புதன் 19, ஜனவரி 2022 12:06:17 PM (IST)

தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலை நடத்தினால் கரோனா  பாதிப்பு மிக மோசமடையும் என உயர்நீதிமன்றத்தில் மனுதக்கல் செய்யப்பட்டுள்ளது. 

தமிழக அரசின் ஓய்வுபெற்ற மருத்துவர் நக்கீரன் தரப்பில் மூத்த வழக்கறிஞர் எஸ்.பிரபாகரன் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில், ''தமிழகத்தைப் பொறுத்தவரை கரோனா பரவல் கடந்த சில நாட்களாக அதிகரித்து வருகிறது. குறிப்பாக நாள் ஒன்றுக்கு 2,000 முதல் 3,000 வரை அதிகரித்து வருகிறது. தேர்தலை நடத்தினால் கரோனா பாதிப்பு மிக மோசமான நிலையை எட்ட நேரிடும். 

மார்ச் மாதத்திற்குப் பிறகு கரோனா பாதிப்பு குறைய வாய்ப்புள்ளதாக மருத்துவ வல்லுநர்கள் கூறியுள்ளதால் மார்ச் மாதத்திலோ அல்லது மார்ச் மாத இறுதியிலோ நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இன்று அனைத்துக் கட்சிக் கூட்டம் நடத்தப்படுவதால், நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் ஒத்திவைப்பு முடிவு குறித்து எந்நேரத்திலும் அறிவிப்பு வெளியாக வாய்ப்புள்ளது. நாளை அல்லது நாளை மறுநாள் அவசர வழக்காக எடுக்க பொறுப்புத் தலைமை நீதிபதி அமர்வில் விசாரிக்க வேண்டும்'' என்று குறிப்பிட்டிருந்தார்.

இதனை ஏற்றுக்கொண்ட சென்னை உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதிகள் அமர்வு நாளை மறுநாள் அதாவது 21-ம் தேதி (வெள்ளிக்கிழமை) மனுவை விசாரணைக்கு எடுத்துக் கொள்வதாக அறிவித்துள்ளனர். நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நடத்துவது குறித்து ஜனவரி 27-ம் தேதிக்குள் அறிவிப்பு வெளியிட வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் கெடு விதித்து இருந்த நிலையில், நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் ஒத்திவைப்பு தொடர்பான வழக்கு நாளை மறுநாள் நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads



Arputham Hospital








Thoothukudi Business Directory