» செய்திகள் - விளையாட்டு » சிறப்பு செய்திகள்

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்: வேட்புமனு தாக்கல் முதல் வாக்கு எண்ணிக்கை வரை சிசிடிவி பதிவு!

திங்கள் 3, ஜனவரி 2022 5:29:03 PM (IST)

வேட்புமனு தாக்கல் முதல் வாக்கு எண்ணிக்கை வரை கண்காணிப்பு கேமராவில் பதிவு செய்ய வேண்டும் என உயர்நீதிமன்றம் அறிவித்துள்ளது.

தமிழ்நாட்டில் ஊரக உள்ளாட்சி தேர்தல் நடந்து முடிந்துள்ள நிலையில் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளுக்கான நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை நடத்த மாநில தேர்தல் ஆணையம் தீவிர ஏற்பாடுகளை செய்து வருகிறது.  ஜனவரி 31-ந்தேதிக்குள் இந்த தேர்தலை நடத்துமாறு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ள நிலையில் பொங்கலையொட்டி தேர்தல் தேதி அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் இந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை நேர்மையாக நடத்த உத்தரவிடக்கோரி முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், மாநில தேர்தல் ஆணைய விதிகளை கண்டிப்புடன் பின்பற்றி நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை நடத்த வேண்டும். வேட்புமனு தாக்கல் முதல் வாக்கு எண்ணிக்கை வரை கண்காணிப்பு கேமராவில் பதிவு செய்ய வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளது.


மக்கள் கருத்து

MuruganJan 22, 2022 - 08:56:52 AM | Posted IP 173.2*****

Nagarpura election intha month nadathi musings. Coronavai karanam katti thalli poda vendam. 5 statela election nadakkuthu intha electiona nadatha enna pay am.

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Arputham HospitalThoothukudi Business Directory