» செய்திகள் - விளையாட்டு » சிறப்பு செய்திகள்

பிறப்பு, இறப்பு பதிவில் காலதாமதக் கட்டணத்தில் இருந்து விலக்கு: முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு

செவ்வாய் 8, ஜூன் 2021 5:00:40 PM (IST)

கடந்த ஆண்டு ஜனவரி முதல் காலந்தாழ்வு பதிவு விண்ணப்பங்களுக்கு காலதாமதக் கட்டணத்தில் இருந்து விலக்கு அளிக்கப்படும் என முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். 

இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பு : பிறப்பு, இறப்பு பதிவில் காலதாமதக் கட்டணத்தில் இருந்து விலக்கு அளிக்கப்படும். காலதாமதக் கட்டண விலக்கினால் உள்ளாட்சி அமைப்புகளுக்கு ஏற்படும் வருவாய் இழப்பை தமிழக அரசு ஈடு செய்யும். 

21-30 நாட்கள் வரையிலான காலதாமதக் கட்டணம் ரூ.100, 30 நாட்கள் - 1 ஆண்டு வரையிலான காலதாமதக் கட்டணம் ரூ.200,  1 ஆண்டுக்கு மேலான காலதாமதக் கட்டணம் ரூ.500 ஆக வசூலிக்கப்பட்டு வந்த நிலையில் காலதாமதக் கட்டணத்தில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு ஜனவரி முதல் காலந்தாழ்வு பதிவு விண்ணப்பங்களுக்கு காலதாமதக் கட்டணத்தில் இருந்து விலக்கு அளிக்கப்படும். இவ்வாறு அவர் கூறி உள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Nalam Pasumaiyagam
Black Forest Cakes
Thoothukudi Business Directory