» செய்திகள் - விளையாட்டு » சிறப்பு செய்திகள்

தமிழக சட்டமன்றத்தில் பா.ஜ.க உறுப்பினர்கள் : சபதம் நிறைவேறியதாக எல் முருகன் பெருமிதம்

திங்கள் 3, மே 2021 4:52:53 PM (IST)

தமிழக சட்டமன்றத்தை பா.ஜ.க உறுப்பினர்கள் அலங்கரிப்பார்கள் என்ற சபதம் நிறைவேறி இருக்கிறது என பாஜக தலைவர் எல் முருகன் கூறியுள்ளார்.

இது தொடர்பாக அவர்  வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: மக்கள் அளித்துள்ள தீர்ப்பை ஏற்கிறோம். தேர்தல் மூலம் கிடைக்கும் வெற்றியாக இருந்தாலும், தோல்வியாக இருந்தாலும் பா.ஜ.க மக்களுக்காக உழைப்பதில் என்றும் பின் வாங்கியதில்லை பா.ஜ.க அரசியல் கட்சி மட்டுமல்ல மக்களுக்காகவும், தேசத்திற்காகவும் சேவை செய்கிற அமைப்பும் ஆகும்.

நான் மாநிலத்தலைவராக பொறுப்பேற்ற போது தெரிவித்த கருத்துக்களை மீண்டும் நினைவூட்ட கடமைப்பட்டிருக்கிறேன். தமிழகத்தில் தாமரை மலராது என்று சொல்லி கொண்டு இருந்தவர்கள் மத்தியில் 2021-ல் பா.ஜ.க சட்டமன்ற உறுப்பினர்கள் சட்டமன்றத்தை அலங்கரிப்பார்கள் என்று சபதம் ஏற்றிருந்தோம். இன்று அது நிறைவேறி இருக்கிறது.

1996-ல் ஒரு சட்டமன்ற உறுப்பினரும் அதன் பிறகு 2001-ல் நான்கு சட்டமன்ற உறுப்பினரும் இருந்தார்கள். இப்போது 2021-ல் 20 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் நான்கு சட்டமன்ற உறுப்பினர்களை பா.ஜ.க பெற்றிருக்கிறது. மூத்த தலைவர் வி.சி. காந்தி, பா.ஜ.க அகில பாரத மகளிரணி தலைவர் வானதி சீனிவாசன், முன்னாள் அமைச்சர் நயினார் நாகேந்திரன், சிறந்த கல்வியாளர் சி.சரஸ்வதி, ஆகியோர் வெற்றி பெற்று இருக்கிறார்கள். இவர்களின் அனுபவம், தொலைநோக்கு சிந்தனை, ஆற்றல் தமிழக மக்களுக்கு பெரிதும் பயன்படும்.

தமிழக சட்டமன்ற தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றிக்காக பிரச்சாரங்கள் மேற்கொண்ட பிரதமர் நரேந்திர மோடிக்கும், அகில பாரத தலைவர் ஜே.பி.நட்டவுக்கும், உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கும் மத்திய அமைச்சர்கள் நிர்மலா சீத்தாராமன், ராஜ்நாத்சிங், ஸ்மிருதி ராணி, உள்பட அனைத்து தலை வர்களுக்கும், அனைத்திந்திய அண்ணா திராவிட ஒருங்கிணைப் பாளர் ஓ.பன்னீர் செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி மற்றும் அனைத்து தமிழக தலைவர்களுக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

சட்டமன்ற தேர்தலில் கடுமையாக உழைத்திட்ட பாரதிய ஜனதா கட்சி, அ.தி.மு.க, பா.ம.க, த.மா.க உள்பட தேசிய ஜனநாயக கூட்டணி கட்சி நிர்வாகிகளுக்கும், தொண்டர்களுக்கும், தேசிய ஜனநாயக கூட்டணிக்கு ஆதரவளித்து 76 இடங்களை வழங்கிய தமிழக மக்களுக்கும் தமிழக பா.ஜ.கவின் சார்பில் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.


மக்கள் கருத்து

TUTICORIN MAKKALமே 5, 2021 - 03:48:41 PM | Posted IP 162.1*****

GREAT SIR, WELCOME TO TAMILNADU ASSEMBLY.

Makkalமே 3, 2021 - 08:18:24 PM | Posted IP 108.1*****

வாழ்த்துக்கள் தாமரை சட்டசபைக்குள் மலர்ந்தது.ஆட்டம் ஆரம்பம்.

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Black Forest Cakes


Nalam Pasumaiyagam

Thalir ProductsThoothukudi Business Directory