» செய்திகள் - விளையாட்டு » சிறப்பு செய்திகள்

ஆட்சித் தேர் சரியாக செலுத்தப்படுவதை உறுதி செய்யும் அச்சாணியாக செயல்படுவோம்: இபிஎஸ், ஓபிஎஸ்

திங்கள் 3, மே 2021 4:23:23 PM (IST)

அதிமுக மற்றும் கூட்டணிக் கட்சி வேட்பாளர்களுக்கு வாக்களித்த வாக்காளப் பெருமக்களுக்கு நன்றி தெரிவித்து அதிமுக சார்பில் இபிஎஸ், ஓபிஎஸ் இணைந்து கூட்டறிக்கை வெளியிட்டுள்ளனர்.

தமிழ்நாட்டில் நடைபெற்று முடிந்த 2021ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் திமுக கூட்டணி 159 இடங்களில் அபார வெற்றி பெற்றுள்ளது.அதிமுக கூட்டணி 75 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. அதிமுக மற்றும் கூட்டணிக் கட்சி வேட்பாளர்களுக்கு வாக்களித்த வாக்காளப் பெருமக்களுக்கு நன்றி தெரிவித்து அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி கே. பழனிசாமி ஆகியோர் கூட்டாக இணைந்து இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில்,

சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக மற்றும் கூட்டணி கட்சி வேட்பளார்களுக்கு வாக்களித்தவர்களுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம். நிர்வாகம் எனும் நாணயத்தின் ஒரு பக்கம் ஆளும் கட்சி, மற்றொரு பக்கம் எதிர்க்கட்சி. ஆட்சித் தேர் சரியாக செலுத்தப்படுவதை உறுதி செய்யும் அச்சாணியாகவும் செயல்பட வேண்டிய கடமை நமக்கிருக்கிறது. தமிழ்நாடு பேரவையிலும், ஆட்சி நிர்வாகத்திலும் எதிர்க்கட்சி எனும் பொறுப்புடன் என்னென்ன பணிகளை ஆற்ற வேண்டுமோ அவை அனைத்தையும் செவ்வனே நிறைவேற்றுவோம்.

அதிமுக மற்றும் கூட்டணிக கட்சி வேட்பாளர்களின் வெற்றிக்காக அரும்பணியாற்றிய கட்சியினருக்கு உளமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம். தொடர்ந்து மக்கள் பணிகளை ஆற்றுவதற்கும், கட்சியைக் காக்கும் கடமையில் தோளோடு தோள் நின்று உழைப்பதற்கும் அனைவரும் உறுதி ஏற்க வேண்டுமாய் கேட்டுக் கொள்கிறோம்என இபிஎஸ், ஓபிஎஸ் இணைந்து கூட்டறிக்கையில் தெரிவித்துள்ளனர்


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored AdsThalir Products

Black Forest Cakes


Nalam Pasumaiyagam

Thoothukudi Business Directory