» செய்திகள் - விளையாட்டு » சிறப்பு செய்திகள்

தமிழக முதல்வராக மே 7ல் மு.க.ஸ்டாலின் பதவி ஏற்பு

திங்கள் 3, மே 2021 10:46:37 AM (IST)

தமிழக முதல்வராக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வருகிற மே 7 ஆம் தேதி பதவியேற்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. 

தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் பெருவாரியான இடங்களில் திமுக தலைமையிலான கூட்டணி வெற்றி பெற்றுள்ளது.  இதையடுத்து 10 ஆண்டுகளுக்குப் பின் தமிழகத்தில் திமுக ஆட்சி அமையவுள்ளது. முதல்முறையாக ஸ்டாலின் தமிழக முதல்வராக பொறுப்பேற்க உள்ளார். இந்நிலையில்  வருகிற மே 7 ஆம் தேதி(வெள்ளிக்கிழமை) அவர் பதவியேற்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. 

முன்னதாக மே 4 ஆம் தேதி திமுக சட்டப்பேரவை உறுப்பினர்களின் கூட்டம் நடைபெற உள்ளதாக மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார். அதேபோன்று கரோனா பரவல் காரணமாக பதவியேற்பு விழா எளிமையான முறையில் நடைபெறும் என்றும் கூறியிருந்தார். 

வெற்றிக்குப் பிறகு திமுக தலைவர் ஸ்டாலின் இன்று கட்சியின் தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்துக்கு வருகை தந்துள்ளார். அவரைக் காண கட்சித் தலைவர்கள் காத்திருக்கின்றனர். அறிவாலயத்துக்கு வந்த ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. முன்னதாக, அவர் கோபாலபுரம் சென்று அவரது தாயார் தயாளு அம்மாளிடம் ஆசி பெற்றார். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Thalir ProductsBlack Forest CakesNalam PasumaiyagamThoothukudi Business Directory