» கல்வி / வேலை » கல்விச்செய்திகள் (தூத்துக்குடி)

தேசிய வழி திறனறிவுத் தேர்வில் மூக்குப்பீறி பள்ளி மாணவ, மாணவி வெற்றி!

வெள்ளி 1, மார்ச் 2024 9:47:40 PM (IST)

நாசரேத் அருகில் உள்ள மூக்குப்பீறி தூய மாற்கு மேல்நிலைப் பள்ளி மாணவி ஜாய்லின் ஹென்சிகா மற்றும் மாணவன் கணபதி ஆகியோர் தேசிய வழி திறனறிவுத் தேர்வில் வெற்றி பெற்றுள்ளனர்.

2023-2024 ஆம் கல்வி ஆண்டிற்கான தேசிய வழி திறனறிவுத்தேர்வு பிப்ரவரி 2024 ல் நடைபெற்றது. இத் தேர்வில் எட்டாம் வகுப்பில் கல்வி பயிலும் மாணவி ஜாய்லின் ஹென்சிகா மற் றும் மாணவன் கணபதி ஆகியோர் வெற்றி பெற்று மத்திய அரசின் ஊக்கத் தொகையான மாதம் ரூ. 1,000/- வீதம் 4 வருடங்க ளுக்கு ரூ 48,000/- பெறத் தகுதி பெற்றுள்ளனர். 

வெற்றி பெற்ற மாணவ,மாணவியை பள்ளித் தாளாளர்  செல்வின், பள்ளித்தலைமையாசிரியர் எட்வர்ட், ஆசிரியர்கள்,அலுவலர்கள், பள்ளி ஆட்சிமன்றக் குழு, பள்ளி பெற்றோர் ஆசிரியர்கழகம் மற்றும் மாணவ, மாணவிகள் பாராட்டினர். பள்ளி சார்பாக மாணவ, மாணவிக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

அணைத்தலை பள்ளியில் முப்பெரு விழா!

திங்கள் 15, ஜூலை 2024 8:37:29 PM (IST)


Sponsored Ads

Thoothukudi Business Directory