» கல்வி / வேலை » கல்விச்செய்திகள் (தூத்துக்குடி)

நாசரேத் மர்காஷிஸ் மேல்நிலைப் பள்ளியில் ஆண்டு விழா

வெள்ளி 1, மார்ச் 2024 10:22:13 AM (IST)நாசரேத்  மர்காஷிஸ் மேல்நிலைப் பள்ளியில் ஆண்டு விழா நடந்தது. 

பள்ளி தாளாளர் சுதாகர் தலைமை வகித்தார் தூய யோவான் பேராலய தலைமைகுரு  ஹென்றி ஜீவானந்தம் ஆரம்ப ஜெபம் செய்தார் .பள்ளி பாடகர் குழுவினர் சிறப்பு பாடல்களை பாடினர்.. இயற்பியல் ஆசிரியர் ஜெர்சோம் ஜெபராஜ்  வரவேற்றார்.  தலைமை ஆசிரியர் கென்னடி வேதராஜ் ஆண்டறிக்கை  சமர்ப்பித்தார்.. பள்ளி முன்னாள் தலைமை ஆசிரியர் ரத்தினகுமார் வாழ்த்திப் பேசினார்.

பத்தாம் பதினொன்றாம் மற்றும் 12ம் வகுப்பில் சிறப்பிடத்தை பெற்ற மாணவர்களுக்கு பரிசுகளும் சான்றிதழ்களும் வழங்கப்பட்டன. ஒவ்வொரு வகுப்பிலும் சிறப்பிடம் பெற்ற மாணவர்களுக்கும், பாடவாரியாக முதலிடம் பெற்ற மாணவர்களுக்கும் சிறப்பு பரிசுகளும் வழங்கப்பட்டன. இதையடுத்து மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் இடம் பெற்றன. நிகழ்ச்சிகளை தொழிற்கல்வி ஆசிரியர் ஜெய்சன் பாபு தொகுத்து வழங்கினார். 

இதில்  பழைய மாணவர் சங்க தலைவர் ரூபன் துரைசிங் மற்றும் ஆசிரியர்கள் , அலுவலர்கள்,மாணவர்கள் கலந்து கொண்டனர்.
உதவி தலைமை ஆசிரியர் ஜெயசீலன் சேகர் நன்றி கூறினார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

அணைத்தலை பள்ளியில் முப்பெரு விழா!

திங்கள் 15, ஜூலை 2024 8:37:29 PM (IST)


Sponsored Ads

Thoothukudi Business Directory