» கல்வி / வேலை » கல்விச்செய்திகள் (தூத்துக்குடி)
மரியன்னை கல்லூரியில் அறிவியல் கண்காட்சி :பள்ளி மாணவர்கள் பங்கேற்பு!
புதன் 28, பிப்ரவரி 2024 5:06:17 PM (IST)

தூத்துக்குடி மரியன்னை கல்லூரியில் அறிவியல் தினத்தை முன்னிட்டு பள்ளி மாணவ மாணவியர்களுக்கான அறிவியல் கண்காட்சி நடைபெற்றது.
தூத்துக்குடி தூய மரியன்னை கல்லூரியில் அறிவியல் தினத்தை முன்னிட்டு மரிய நட்சத்திர கழகத்தின் சார்பில் நடுநிலைப்பள்ளி மாணவ மாணவியர்களுக்கான அறிவியல் கண்காட்சி, மற்றும் வினாடி வினா நடைபெற்றது. கல்லூரியின் முதல்வர் ஜெசி பெர்னாண்டோ தலைமை வகித்து கண்காட்சியை திறந்து வைத்தார். கல்லூரி செயலர் சிபானா, சுயநதிப் பிரிவு இயக்குனர் ஜோஸ்பின் ஜெயராணி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
தூத்துக்குடி மற்றும் அதன் சுற்று வட்டாரத்தில் சுமார் 11 பள்ளிகளைச் சார்ந்த 1353 மாணவ மாணவியர்கள் கண்காட்சியில் கலந்துகொண்டனர். கண்காட்சியில் பள்ளி மாணவ மாணவர்களின் அறிவியல் ஆர்வத்தை தூண்டும் வகையில் அறிவியல் நிகழ்வுகள், பரிசோதனைகள், அறிவியல் கொள்கைகள், செயல்முறை விளக்கங்கள் ஆகியவற்றை அனைத்து அறிவியல் துறையைச் சார்ந்த மாணவியர்கள் ஆர்வமுடன் விளக்கிக் காட்டினர்.
வினாடி வினா போட்டியில் கலந்து கொண்ட மாணவ மாணவியருக்கு ரூ.8000 மதிப்பிலான பரிசுத்தொகையும், பரிசு கோப்பைகளும் வழங்கப்பட்டன. நிகழ்ச்சி ஏற்பாடுகளை மரிய நட்சத்திர கழக ஒருங்கிணைப்பாளர் ஆரோக்கிய ஜெனிசியஸ் அல்போன்ஸ் செய்திருந்தனார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

நாசரேத் மர்காஷிஸ் மேல்நிலைப்பள்ளியில் சாரணர் இயக்க மாணவர்களுக்கு பாராட்டு விழா
வெள்ளி 14, பிப்ரவரி 2025 8:44:38 PM (IST)

நாசரேத் மர்காஷிஸ் பள்ளியில் பாராட்டு விழா!
சனி 8, பிப்ரவரி 2025 8:37:06 AM (IST)

கீதா மெட்ரிக்மேல்நிலைப் பள்ளி ஆண்டு விழா: அமைச்சர் கீதாஜீவன் பங்கேற்பு
திங்கள் 3, பிப்ரவரி 2025 8:44:04 PM (IST)

நாசரேத் பாலிடெக்னிக் கல்லூரியில் வேலை வாய்ப்பு முகாம்
வியாழன் 30, ஜனவரி 2025 10:02:58 AM (IST)

இஞ்ஞாசியார் பள்ளியில் மரக்கன்று நடும் நிகழ்வு
புதன் 29, ஜனவரி 2025 5:53:27 PM (IST)

செய்துங்கநல்லூர் எம்.எம்.நடுநிலைப்பள்ளியில் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு
திங்கள் 27, ஜனவரி 2025 11:47:48 AM (IST)
