» கல்வி / வேலை » கல்விச்செய்திகள் (தூத்துக்குடி)
நாசரேத் சாலமோன் பள்ளியில் தீபாவளி விழா!
சனி 11, நவம்பர் 2023 4:20:58 PM (IST)
நாசரேத் சாலமோன் மெட்ரிகுலேசன் மேல்நிலைப் பள்ளியில் தீபாவளி பண்டிகை சிறப் பாக கொண்டாடப்பட்டது.
விழாவிற்கு பள்ளி தாளாளர் ஜமீன் சாலமோன் தலைமை தாங்கினார். பள்ளி நிர்வாகி பியூலா சாலமோன் தீபாவளியைப் பற்றி மாணவர்களுக்கு எடுத்து கூறினார். பள்ளி தலைமை ஆசிரியர் ஜான்சி கனகராஜ் தீபாவளி கொண் டாடப்படுவதற்கான காரண த்தின் விளக்கத்தை மாண வர்களுக்கு எடுத்துரைத்தார்.
பள்ளி ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் தீபாவளியைப்பற்றி பேசினர். மாணவர்கள் மிக உற்சாகத்துடன் பட்டாசு வெடித்து மகிழ்ந்தனர். இறுதியில் உதவி முதல்வர் பியூலா ஜாய்ஸ் நன்றி உரை கூறினார். விழா ஏற்பாட்டினை உடற்கல்வி ஆசிரியர் ஜோயல் ராஜ் குமார் மற்றும் ஆசிரியர்கள் செய்திருந்தனர்.