» கல்வி / வேலை » கல்விச்செய்திகள் (தூத்துக்குடி)
புனித லூக்கா சமுதாய கல்லூரியில் புத்தாடை வழங்கும் நிகழ்ச்சி
சனி 11, நவம்பர் 2023 4:19:05 PM (IST)
நாசரேத் புனித லூக்கா சமுதாய கல்லூரியில் புத்தாடை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
நாசரேத் புனித லூக்கா சமுதாய கல்லூரியில் மனித நேய மேம்பாட்டு மன்றத்தின் சார்பில் புத்தாடை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. தூய யோவான் பேராலய தலைமைகுரு ஹென்றி ஜீவானந்தம் தலைமை வகித்தார். உதவி குரு.பொன்செல்வின் அசோக்குமார் ஆரம்ப ஜெபம் செய்தார்.கல்லூரி இயக்குனர் பேரா.ஜெயசந்திரன் வரவேற்றார். ஊழியர் தியோடர் சாமுவேல் வாழ்த்தி பேசினார்.
நிகழ்ச்சியில் நோயால் பாதிக்கப்பட்ட 20 பேர்களுக்கு புத்தாடை மற்றும் ரொக்கப்பணம் ரூ.1000/ ம் வழங்கப்பட்டன. ஆசிரியை சுவீட்லின் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார் . மாணவிகளின் கலைநிகழ்ச்சிகள் இடம் பெற்றன. இதில் ஆசிரியர்கள், அலுவலர்கள் மற்றும் மாணவிகள் கலந்து கொண்டனர். கல்லூரி தாளாளர் செல்வின் நன்றி கூறினார்.