» கல்வி / வேலை » கல்விச்செய்திகள் (தூத்துக்குடி)
நாசரேத் மர்காஷிஸ் மேல்நிலைப்பள்ளியில் மாணவர்களுக்கு வழிகாட்டுதல் நிகழ்ச்சி!
சனி 11, நவம்பர் 2023 10:45:49 AM (IST)
நாசரேத் மர்காஷிஸ் மேல்நிலைப் பள்ளி மாணவர்களுக்கு "உன்னால் முடியும்"என்ற தலைப்பில் லட்சிய வழிகாட்டுதல் நிகழ்ச்சி நடத்தப்பட்டது. நிகழ்ச்சிக்கு தலைமை ஆசிரியர் கென்னடி வேதராஜ் தலைமை வைத்தார்.
சிறப்பு விருந்தினராக நாசரேத் காவல் துறை உதவி ஆய்வாளர் ராய்ஸ்டன் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றுகையில், மாணவர்கள் தன்னம்பிக்கையை வளர்த்துக் கொள்ள வேண்டும்.கல்வியும் ஒழுக்கமும் ஒன்றோடு ஒன்று இணைந்தவை. எந்த சூழ்நிலையிலும் ஒழுக்கத்தை கடைபிடிக்க வேண்டும். பேருந்து பயணத்தில் பாதுகாப்பாக பயணிக்க வேண்டும். இருசக்கர வாகனங்களை பள்ளி மாணவர்கள் ஓட்டுநர் உரிமம் இன்றி இயக்கக் கூடாது என்றும், உயர் கல்வி வாய்ப்புகள் குறித்தும் பேசினார்.
இயற்பியல் ஆசிரியரும் நிகழ்ச்சி ஒருங்கிணைப் பாளருமான ஜெர்சோம் ஜெபராஜ் வரவேற்றார். தொழிற்கல்வி ஆசிரியர் ஜெய்சிங் ஜெயக்குமார் ஆரம்ப ஜெபம் செய்தார். தொழிற்கல்வி ஆசிரியர் ஜெய்சன் பாபு நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினார். முதுகலை ஆசிரியர் ஸ்டான்லி, உடற்கல்வி இயக்குனர் பெலின் பாஸ்கர், உடற்கல்வி ஆசிரியர் சுஜித் செல்வ சுந்தர் மற்றும் பிற ஆசிரியர்கள் கலந்து கொண்டனர். உடற்கல்வி ஆசிரியர் தனபால் நன்றி கூறினார்.மேலும் தூத்துக்குடி மாவட்ட அளவில் சிலம்பம் மற்றும் சுருள்வாள் போட்டிகளில் வெற்றி பெற்ற ரோஹித், தர்ஷன், கேசவராம் ஆகிய மூன்று மாணவர்களுக்கு பதக்கங்களும் சான்றிதழ்க ளும் வழங்கப்பட்டன.