» கல்வி / வேலை » கல்விச்செய்திகள் (தூத்துக்குடி)

நாசரேத் சி.எஸ்.ஐ. பாலிடெக்னிக் கல்லூரியில் அரசு கல்வி கடன் பற்றிய விழிப்புணர்வு முகாம்!

புதன் 8, நவம்பர் 2023 10:05:49 AM (IST)நாசரேத், ஜெயராஜ் அன்னபாக்கியம் சி.எஸ்.ஜ பாலிடெக்னிக் கல்லூரியில் மாணவர்களுக்கு வங்கி மூலம் அரசின் கல்வி கடன் பற்றிய விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.

கல்லூரியின் முதல்வர் கோயில்ராஜ் ஞானதாசன் வரவேற்புரை நிகழ்த்தினார். கல்லூரியின் கல்வி கடன் பொறுப்பு அலுவலர் சேகர் கல்வி கடன் திட்டமான வித்தியா லெட்சுமி பற்றி விளக்கிகூறினார். இந்த நிகழ்ச்சியில், எரல் சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தார் பேச்சிமுத்து சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மாணவர்களுக்கு வங்கி மூலம் கல்வி கடன் பெறுவதற்கான சிறப்புறை நிகழ்த்தினார். 

இந்த நிகழ்ச்சியில் நாசரேத், கிராம நிர்வாக அலுவலர் முத்துமாலை மற்றும் துறை தலைவர்கள், ஆசியர்கள் மற்றும் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை கல்லூரி தாளாளரும், திருமண்டல லே செயலரும், திருமண்டல கல்லூரிகளின் நிலைவர குழு செயலருமான நீகர் பிரின்ஸ் கிப்ட்சன் தலைமையில் முதல்வர், நாட்டு நல பணி திட்ட அலுவலர் மற்றும் ஆசிரியர்கள் செய்திருந்தனர். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads


Thoothukudi Business Directory