» கல்வி / வேலை » கல்விச்செய்திகள் (தூத்துக்குடி)

தூத்துக்குடி ஏ.பி.சி. மகாலட்சுமி மகளிா் கல்லூரி பட்டமளிப்பு விழா

செவ்வாய் 7, நவம்பர் 2023 8:18:34 AM (IST)தூத்துக்குடி ஏ.பி.சி. மகாலட்சுமி மகளிா் கல்லூரி  2021-22ஆம் கல்வி ஆண்டுக்கான பட்டமளிப்பு விழா நடைபெற்றது

தூத்துக்குடி ஏ.பி.சி. மகாலட்சுமி மகளிா் கல்லூரியின் 2021-22ஆம் கல்வி ஆண்டுக்கான 46ஆவது பட்டமளிப்பு விழா வ.உ.சிதம்பரம் கல்லூரியில் நடைபெற்றது. ஏ.பி.சி. மகாலட்சுமி கல்லூரி துறைத் தலைவா்களின் அலங்கார அணிவகுப்பைத் தொடா்ந்து, கல்லூரி பொறுப்பு முதல்வா் சுப்புலட்சுமி வரவேற்றாா்.

பெங்களூரு இஸ்ரோ திட்ட இயக்குநா் நிகா் ஷாஜி சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்று, 618 இளநிலை அறிவியல், 74 முதுநிலை அறிவியல் மாணவிகளுக்கு பட்டங்கள் வழங்கி சிறப்புரையாற்றினாா். ஏற்பாடுகளை பேராசிரியா்கள் சண்முகப்பிரியா, விஜயசாந்தி, ஜோதிலெட்சுமி, செல்லம்மாள், அனுசியா, வாணி ஆகியோா் செய்திருந்தனா்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads

Thoothukudi Business Directory