» கல்வி / வேலை » கல்விச்செய்திகள் (தூத்துக்குடி)
மண்டல அளவிலான தடகளப்போட்டி: நாசரேத் ஜெயராஜ் அன்னபாக்கியம் பொறியியல் கல்லூரி மாணவிகள் சாதனை !
திங்கள் 6, நவம்பர் 2023 9:52:07 AM (IST)
மண்டல அளவிலான தடகளப்போட்டிகளில் நாசரேத் ஜெயராஜ் அன்னபாக்கியம் பொறியியல் கல்லூரி மாணவிகள் சாதனை படைத்துள்ளனர்.
அண்ணா பல்கலைக்கழகம் சார்பில் மண்டல அளவிலான தடகளப் போட்டிகள் சிவகாசி மெப்கோ பொறியியல் கல்லூரி மைதானத்தில் நடந்தது. இதில் சுமார் 21 பொறியியல் கல்லூரிகள் கலந்து கொண்டன. இந்த தடகளப் போட்டியில் பெண்கள் பிரிவில் நாசரேத் ஜெயராஜ் அன்ன பாக்கியம் சி.எஸ்.ஐ. பொறியியல் கல்லூரியைச் சார்ந்த மூன்றாம் ஆண்டு கணினித் துறை மாணவி விவேகா 1500 மீட்டர் ஓட்டத்தில் முதல் இடத்தையும் 800 மீட்டர் ஓட்டத்தில் 2 வது இடத்தையும், நான்காம் ஆண்டு மின்னணுவியல் துறை மாணவி ஷாலினி ஈட்டி எறிதல் மற்றும் குண்டு எறிதல் போட்டியில் 3 வது இடத்தையும்,
மூன்றாம் ஆண்டு தகவல் தொழில்நுட்பத் துறை மாணவி குணசுந்தரி மும்முறை தாண்டும் போட்டியில் 3 வது இடத்தையும், மூன்றாம் ஆண்டு மின்னணுவியல் துறை மாணவி ஜெல்சியால் 400 மீட்டர் ஓட்டத்தில் 3 வது இடத்தையும், மூன்றாம் ஆண்டு தகவல் தொழில் நுட்பத் துறை மாணவி விசாலினி 4×400 மீட்டர் தொடர் ஓட்டப்பந்தயத்தில் 3வது இடத்தையும் பெற்று சாதனை படைத்துள்ளனர் .
சாதனை படைத்த மாணவிகளையும், பயிற்சியளித்த உடற்கல்விஇயக்குனர் ஜோஸ் சுந்தரையும் கல்லூரி தாளாளர் ஜெயக்குமார் ரூபன், முதல்வர் டாக்டர் ஜெயக்குமார் மற்றும் பேராசிரியர்கள், அலுவலகப் பணியாளர்கள், மாணவ, மாணவிகள் பாராட்டினர்.