» கல்வி / வேலை » கல்விச்செய்திகள் (தூத்துக்குடி)

மாநில அளவிலான இலக்கிய மன்ற போட்டி: 4 மாணவர்கள் தேர்வு

ஞாயிறு 26, மார்ச் 2023 8:33:59 AM (IST)



மாநில அளவிலான இலக்கிய மன்ற போட்டிக்கு மேல வெள்ளமடம், முக்காணி, உள்ளிட்ட 4 பள்ளிகளை சேர்ந்த 4 மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளதை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ரெஜினி பாராட்டி பரிசு வழங்கினார். 

அரசுப்பள்ளிகளில் 6முதல் 9 ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு இலக்கிய மன்றம், வினாடி வினா மன்றம், வானவில் மன்றம், சிறார் திரைப்படங்கள் திரையிடுதல் என்ற நான்கு வகையான செயல்பாடுகள் ஒவ்வொரு மாதமும் பள்ளி அளவில் வட்டார அளவில் மாவட்ட அளவில் மாநில அளவில் போட்டிகள் நடத்தி மாநில அளவில் வெற்றி பெறும் மாணவர்கள் வெளிநாடுகளுக்கு அழைத்துச் செல்லப்படுவர் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள பள்ளிகளில் நான்கு மன்றங்களும் துவக்கப்பட்டு போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன. 

இந்நிலையில் மாவட்ட அளவிலான இலக்கிய மன்ற செயல்பாடுகளுக்கான போட்டிகள் நடைபெற்றது. இப்போட்டியில் 13 வட்டாரங்களிலிருந்தும் 100க்கும் மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர். தூத்துக்குடி மாவட்ட அளவிலான இலக்கிய மன்ற போட்டிகளில் வெற்றி பெற்று மாநில அளவிலான போட்டியில் பங்கேற்க முக்காணி அரசு மேல்நிலைப்பள்ளி மாணவன் ஜெஸ்ரின், ஆழ்வார்திருநகரிஒன்றியம் மேலவெள்ளமடம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி மாணவி அனுஷியா, தூத்துக்குடி சாமுவேல்புரம் மாநகராட்சி மேல்நிலைப்பள்ளி மாணவி அபிநயா, கருங்குளம் ஒன்றியம் அனவரதநல்லூர் அரசு மேல்நிலை பள்ளி மாணவி செல்வி ஆகியோர் தேர்வு செய்யப்பட்டு சென்னைக்கு அழைத்து செல்லப்பட உள்ளனர். 

வெற்றி பெற்ற மாணவர்களை பாராட்டி மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் ரெஜினி புத்தகங்கள் பரிசளித்து வாழ்த்தினார். அப்போது தூத்துக்குடி மாவட்ட உதவி திட்ட அலுவலர் முனியசாமி,மாவட்ட சுற்றுச்சூழல் ஒருங்கிணைப்பாளர் ஹசன்பாணு, பள்ளித்துணை ஆய்வாளர்கள் அப்துல்காதர், ஆனந்தகுமார், ரமேஷ் மற்றும் மாணவர்களின் ஆசிரியர்கள் பெற்றோர்கள் உடனிருந்தனர். முன்னதாக தூத்துக்குடி மாவட்டக்கல்வி அலுவலர் குருநாதன் அவர்கள் வெற்றி பெற்ற மாணவர்களைப் பாராட்டினார்..


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads







Thoothukudi Business Directory