» கல்வி / வேலை » கல்விச்செய்திகள் (தூத்துக்குடி)

மாவடிபண்ணையில் மாற்றுத்திறனுடைய மாணவர்களுக்கான மருத்துவ முகாம்

புதன் 25, ஜனவரி 2023 8:40:40 PM (IST)ஆழ்வார்திருநகரி ஒன்றியம் மாவடிபண்ணை வட்டார வளமையத்தில் ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி மாற்றுத்திறனுடைய மாணவர்களுக்கான மருத்துவ முகாம் நடந்தது. 

மாவட்டதொடக்கக்கல்வி அலுவலர் உதயகுமார் தலைமை வகித்து முகாமை தொடங்கி வைத்தார். வட்டாரகல்விஅலுவலர்கள டக்ளஸ் அல்பர்ட்ராஜ், ரோஸ்லின் ராஜம்மாள் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்த முகாமில் மருத்துவ சான்றிதழ், தேசிய அடையாளஅட்டை பதிவுசெய்தல், பதிவைபுதுப்பித்தல், தனித்துவ அடையாள அட்டைக்கான பதிவு, போக்குவரத்து சலுகை, உபகரணங்கள் பெறபதிவு, உதவிதொகைக்கு விண்ணப்பித்தல் போன்ற பணிகள் மேற்கொள்ளப்பட்டன. 

முகாமில் மனநலமருத்துவர், காது மூக்குதொண்டைமருத்துவர், கண் மருத்துவர், எலும்பியல் மருத்துவர் ஆகியோர் கலந்துகொண்டு சிகிச்சைஅளித்தனர். ஏற்பாடுகளை வட்டார வளமைய மேற்பார்வையாளர்சுபாஜேனட்ஆனந்தி தலைமையில், ஆசிரியப் பயிற்றுனர்கள் முத்துலெட்சுமி, புனிதாராஜா, கோகிலாஆகியோர் செய்திருந்தனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored AdsThoothukudi Business Directory