» கல்வி / வேலை » கல்விச்செய்திகள் (தூத்துக்குடி)

மூக்குப்பீறி பள்ளியில் மிதிவண்டி வழங்கும் விழா

ஞாயிறு 18, செப்டம்பர் 2022 12:45:11 PM (IST)மூக்குப்பீறி தூய மாற்கு பள்ளியில் தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டி வழங்கும் விழா நடைபெற்றது

தூத்துக்குடி மாவட்டம், நாசரேத் அருகில் உள்ள மூக்குப்பீறி தூய மாற்கு மேல்நிலைப் பள்ளியில் தமிழக அரசின் விலையில்லா மிதி வண்டிகள் வழங்கும் விழா நடைபெற்றது. ஆழ்வார்திருநகரி ஊராட்சி சிறப்பு விருந்தினராக   கலந்து கொண்டு 97 மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டியை வழங்கினார்.

விழாவில் மூக்குப்பீறி ஊராட்சிமன்ற தலைவி கமலா கலையரசு, மூக்குப்பீறி ஊராட்சி மன்ற உறுப்பினர் கலையரசு ஆகியோர் கலந்து கொண்டு  சிறப்பித்தனர். விழாவிற்கு பள்ளித் தாளாளர்  செல்வின் முன்னிலை வகித்தார். பள்ளித் தலைமை ஆசிரியர் எட்வர்ட்  நன்றி கூறினார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

நாசரேத் சமுதாய கல்லூரியில் பரிசளிப்பு விழா!

செவ்வாய் 26, செப்டம்பர் 2023 3:32:41 PM (IST)


Sponsored Ads

Thoothukudi Business Directory