» கல்வி / வேலை » கல்விச்செய்திகள் (தூத்துக்குடி)

தூத்துக்குடி பி.எம்.சி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் விளையாட்டு விழா

புதன் 24, ஆகஸ்ட் 2022 3:37:44 PM (IST)தூத்துக்குடி, மில்லர்புரம், பி.எம்.சி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் 25வது ஆண்டு பரிசளிப்பு விழா நடைபெற்றது.

விழாவில் தூத்துக்குடி வ.உ.சி பொறியியல் கல்லூரி பேராசிரியர் பீட்டர் தேவதாஸ் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். பள்ளி முதல்வர் வரவேற்புரை ஆற்றினார். பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்குப் பரிசுகளையும், சான்றிதழ்கள் வழங்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து நடனம், பாடல், இசை. யோகா, நடிப்பு என  மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. 

விழாவில் துணை முதல்வர் நன்றியுரை வழங்கினார். பள்ளியின் முதன்மை நிர்வாகி ஜோசப் ஜான் கென்னடி, முதல்வர்  பால்கனி, துணை முதல்வர்  ஜேன் மேத்யூ மற்றும் தலைமையாசிரியை  அனிதா ஹேரி உட்பட பலர் கலந்து கொண்டனர். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored AdsThoothukudi Business Directory