» கல்வி / வேலை » கல்விச்செய்திகள் (தூத்துக்குடி)

பண்டாரம்பட்டி பள்ளியில் சுதந்திர தின விழா

செவ்வாய் 16, ஆகஸ்ட் 2022 3:03:25 PM (IST)தூத்துக்குடி, பண்டாரம்பட்டி, தூ.நா.தி.அ.க. தொடக்கப்பள்ளியில் சுதந்திர தின விழா நடைபெற்றது. 

விழாவிற்கு பள்ளியின் தாளாளர் ஆனந்த் சாமுவேல் ஜாண் தாமஸ் தலைமை வகித்து தேசியக் கொடியை ஏற்றினார். சிறப்பு விருந்தினராக லயன் சிவக்குமார் கலந்து கொண்டார். தலைமையாசிரியர் நெல்சன் பொன்ராஜ் அனைவரையும் வரவேற்றார். தொடர்ந்து மாணவ மாணவிகளின் சிறப்பு கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றது. 

அதனைத் தொடர்ந்து வாய்பாடு ஒப்புவித்தல் போட்டி நடைபெற்றது. போட்டியின் நடுவர்களாக ஷார்மினா ஆனந்த், வாகைக்குளம் சாமுவேல் பாலிடெக்னிக் முதல்வர் மோசஸ், ஒருங்கிணைந்த ப்ள்ளி கல்வி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் கிருஷ்ணவேணி ஆகியோர் கலந்து கொண்டு மதிப்பீடு செய்தனர். போட்டிகளில் வெற்றி பெற்ற 4 மாணவர்களுக்கு பள்ளியின் தாளாளர் ஆனந்த் சாமுவேல் ஜாண் தாமஸ் தங்க நாணயம் பரிசாக வழங்கினார். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored AdsThoothukudi Business Directory