» கல்வி / வேலை » கல்விச்செய்திகள் (தூத்துக்குடி)
சக்தி வித்யாலயா பள்ளியில் கல்வி வளர்ச்சி நாள் விழா
வெள்ளி 15, ஜூலை 2022 3:24:33 PM (IST)

தூத்துக்குடி சக்தி வித்யாலயா பள்ளியில் காமராஜரின் 120வது பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.
தூத்துக்குடி 3வது மைல் சக்தி வித்யாலயா மெட்ரிக்குலேசன் பள்ளியில் காமராஜரின் 120வது பிறந்தநாள் விழா கல்வி வளர்ச்சி நாளாக பள்ளியின் முதல்வர் ஆ.ஜெயாசண்முகம் தலைமையில் நடைபெற்றது. மாணவ, மாணவிகள் காமராஜரின் திருவுருவப் படத்திற்கு மாலை அணிவித்து, மலர்கள் தூவி வாழ்த்து தெரிவித்தனர்.
அதன்பின் "காமராஜரின் எளிய வாழ்க்கை முறை” என்ற தலைப்பில் கட்டுரைப் போட்டியும், காமராஜரும் அரசியலும்” என்ற தலைப்பில் பேச்சுப் போட்டியும், கவிதைப் போட்டியும் நடைபெற்றது. நாடகம், பாடல்கள் என மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. போட்டியில் வெற்றிப் பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. நிறைவாக காமராஜரின் வாழ்க்கை வரலாறு பற்றிய திரைப்படம் மாணவ, மாணவிகளுக்கு காண்பிக்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை ஆசிரியைகள் செய்திருந்தனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

நாசரேத் சி.எஸ்.ஐ. பாலிடெக்னிக் கல்லூரியில் போதை ஒழிப்பு உறுதி மொழி!
வியாழன் 11, ஆகஸ்ட் 2022 5:04:11 PM (IST)

ஏபிசி மகாலட்சுமி கல்லூரி சார்பில் வீடுதோறும் தேசிய கொடி வழங்கும் நிகழ்ச்சி
புதன் 10, ஆகஸ்ட் 2022 8:18:06 AM (IST)

நாசரேத் புனித லூக்கா செவிலியர் கல்லூரி மகளிர் விடுதியில் ஜெனரேட்டர் திறப்பு விழா!
வியாழன் 4, ஆகஸ்ட் 2022 4:36:06 PM (IST)

சாத்தான்குளம் அரசு கல்லூரி மாணவிகள் சிறப்பிடம்
வெள்ளி 22, ஜூலை 2022 12:23:10 PM (IST)

பாரதியார் வித்யாலயாவில் இலவச சீருடை வழங்கும் விழா
திங்கள் 18, ஜூலை 2022 8:43:50 PM (IST)

நாலுமாவடி காமராஜ் பள்ளியில் காமராஜர் பிறந்த நாள் விழா!
சனி 16, ஜூலை 2022 3:14:32 PM (IST)
