» கல்வி / வேலை » கல்விச்செய்திகள் (தூத்துக்குடி)

தூத்துக்குடி மீன் வளக்கல்லூரியில் வினா போட்டி

சனி 28, மே 2022 4:48:20 PM (IST)



தூத்துக்குடி மீன் வளக்கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில்; "சுதந்திர தின வினாடி வினா போட்டி” நடத்தப்பட்டது

இந்தியாவின் 75 வது சுதந்திர தின (ஆசாதி கா அம்ரி மஹோத்சவ்) நினைவேந்தல் / கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக, தமிழ்நாடு டாக்டர். ஜெ. ஜெயலலிதா மீன்வளப் பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் ஓரு அங்கமான பிரிவுகளில் தூத்துக்குடி மீன்வளக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிறுவனமும் ஒன்று. இந்தக் கல்லூரி மாணவர்களிடையே 2022 மே மாதத்திற்கான கூகுள் மீட் தளம் மூலம் சுதந்திர தின வினாடி வினா போட்டி நடத்தப்பட்டது.

இக்கல்லூரியில் இருந்து மொத்தம் 4 அணிகள் இப்போட்டியில் தீவிரமாக பங்கேற்றுள்ளன. மாதவ் மற்றும் பாலசிங்கம், அஜய்குமார், ராஜேஷ், சிவதர்சினி & சஹாயா ரூப்னா, மற்றும் முகிலன் மற்றும் ஜெப்ரின் ஜோ முறையே முதல், இரண்டாம் மற்றும் மூன்றாம் இடங்கள் ஆகியோர் வெற்றி பெற்றனர். வினாடி-வினா போட்டியின் முடிவில் முதலவர் (பொ) ரா. சாந்தகுமார் நிறைவுரை ஆற்றினார். இந்நிறுவனத்தின் முதல்வர் (பொ) மற்றும் அனைத்து ஊழியர்களும் கலந்து கொண்ட மாணவர்களை வாழ்த்தினார்கள். இக்கல்லூரியில் பயிலும் மாணவ-மாணவியர்கள் உற்சாகமாக கலந்து கொண்டனர். இப்போட்டியை சா.ஆதித்தன் மற்றும் கமிட்டி உறுப்பினர்கள் வெகு சிறப்பாக நடத்தினார்கள்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads







Thoothukudi Business Directory