» கல்வி / வேலை » கல்விச்செய்திகள் (தூத்துக்குடி)

ஸ்டெர்லைட் சார்பில் பள்ளியில் ஸ்மார்ட் வகுப்பறை திறப்பு!

செவ்வாய் 21, டிசம்பர் 2021 4:09:40 PM (IST)



தூத்துக்குடி ராஜாவின்கோவில் டி.என்.டி.டி.ஏ. தொடக்கப் பள்ளியில் ஸ்டெர்லைட் காப்பர் நிறுவனம் சார்பில் ஸ்மார்ட் வகுப்பறை நிறுவப்பட்டுள்ளது. 

தூத்துக்குடி ராஜவின்கோவில் டி.என்.டி.டி.ஏ. தொடக்கப் பள்ளியில் ஸ்டெர்லைட் காப்பர் நிறுவனம் சார்பில் ஸ்மார்ட் வகுப்பறை நிறுவப்பட்டுள்ளது. கிராம பஞ்சாயத்து துணை தலைவர் பிரபா ஹெப்சி இந்நிகழ்ச்சியை துவக்கி வைத்தார். ஸ்மார்ட் வகுப்பறை தொழில்நுட்பத்தின் மூலம் புகைப்படங்கள், வரைபடங்கள், வீடியோக்கள் வாயிலாக மாணவர்களுக்கு கற்பிக்கப்படும். இது மாணவர்களுக்கு சுலபமாகவும், சுவாரஸ்யமாகவும், புரிந்துகொள்ள வழி வகுக்கிறது. 

இந்த நிகழ்ச்சியில் சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் பங்கேற்றனர். மேலும், ஸ்டெர்லைட் காப்பர் நிறுவனத்தின் முக்கிய முன்னெடுப்பான முத்துச்சரத்தின் கீழ், தாமிர வித்யாலயம் இளைஞர்களின் கனவுகளை, அவர்களின் வாழ்க்கை தரத்தை மேம்மபடுத்த தரமான கல்வியையும், கல்வி ஊக்கத் தொகைகையும் வழங்கி வருகிறது. மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகை வழங்குவதன் மூலம் சுமார் 20ஆயிரம் குடும்பங்கள் பயனடைகின்றன.

இந்த நிகழ்ச்சியில், ஸ்டெர்லைட் காப்பர் சிஓஓ சுமதி கூறுகையில், "திருப்பி அளிப்பது என்பது ஸ்டெர்லைட் காப்பர் டி.என்.ஏ.வில் உள்ளது. ஸ்டெர்லைட், தூத்துக்குடி சமூகத்தின் வாழ்க்கையை மேம்படுத்த உறுதிபூண்டு செயல்பட்டு வருகிறது. ஸ்டெர்லைட் நிறுவனத்தின் மூலம் 10,776 மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கினோம். வரும் ஆண்டுகளில் மாணவர்களுக்கான ஸ்டெர்லைட் கல்வித் திட்டம் 20, 000 மாணவர்களை சென்றடைவதை இலக்காக கொண்டு செயல்பட்டு வருகிறோம்.

உலகின் சிறந்த தொழில்நுட்பங்களை தூத்துக்குடி மாணவர்களுக்கு கிடைக்க செய்து பிரகாசமான எதிர்காலத்தையும், அவர்களின் வாழ்க்கை தரம் மேம்படவும் செயலாற்றி வருகிறோம். தூத்துக்குடி மாவட்ட மக்களின் வாழ்வாதாரம் மற்றும் பொருளாதார நிலை உயர கல்வி, சுகாதாரம், சுத்தமான குடிநீர், மரம் வளர்ப்பு, இளைஞர் திறன் மேம்பாடு மற்றும் பெண்களுக்கு அதிகாரம் அளித்தல் ஆகிய சமூக பணிகளை மேற்கொண்டு வருகிறோம்.

வேதாந்தாவின் சமூக நலத் திட்டங்களில் பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாடு முக்கிய பங்கு வகிக்கிறது. நந்த்கர் அங்கன்வாடிகள் மூலம் குழந்தைகளின் ஊட்டச்சத்து குறைபாட்டை ஒழிப்பது, கல்வி, சுகாதாரம் மற்றும் பெண்களுக்கு திறன்களை மேம்படுத்துதல் ஆகிய பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அனில் அகர்வால் அறக்கட்டளையின் கீழ், வேதாந்தா குழுமம் அடுத்த ஐந்து ஆண்டுகளில் ஊட்டச்சத்து, பெண்கள்- குழந்தைகள் மேம்பாடு, சுகாதாரம், மற்றும் விலங்குகள் நலன் ஆகிய திட்டங்களின் மேம்பாட்டிற்காக 5000 கோடி ரூபாய் வழங்க உறுதியளித்துள்ளது.

வேதாந்தா நிறுவனமானது வேதாந்தா ரிசோர்ஸ் லிமிடெட் நிறுவனத்தின் துணை நிறுவனம் ஆகும். எண்ணெய், எரிவாயு மற்றும் உலோக உற்பத்தியில் முன்னணியில் இருக்கும் வேதாந்தா, கடந்த இருபது ஆண்டுகளுக்கும் மேலாக இந்தியாவின் வளர்ச்சியில் பெரும் பங்காற்றி வருகிறது. வேதாந்தா நிறுவனம், இயற்கை வளத்துறையில் சுற்றுச்சூழல் மற்றும் சமூக நிர்வாகத்திற்கான (ESG) கட்டமைப்புகளை ஏற்படுத்த விரிவான செயல்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. 2050க்குள்ளோ அதற்கு முன்னதாகவோ கார்பன் உமிழ்வை குறைத்து பூஜ்ஜியமாக மாற்ற உறுதி பூண்டுள்ளது.

வேதாந்தாவின் சமூக நலத் திட்டங்களில் பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாடு முக்கிய பங்கு வகிக்கிறது. நந்த்கர்கள் அங்கன்வாடிகள் மூலம் குழந்தைகளின் ஊட்டச் சத்து குறைபாட்டை ஒழிப்பது, கல்வி, சுகாதாரம் மற்றும் பெண்களுக்கு திறன்களை மேம்படுத்துதல் ஆகிய பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அனில் அகர்வால் அறக்கட்டளையின் கீழ், வேதாந்தா குழுமம் அடுத்த ஐந்து ஆண்டுகளில் ஊட்டச்சத்து, பெண்கள்- குழந்தைகள் மேம்பாடு, சுகாதாரம், மற்றும் விலங்குகள் நலன் ஆகியவற்றில் சமூக தாக்கத் திட்டங்களுக்காக ரூ.5000 கோடி வழங்க உறுதியளித்துள்ளது என்று தெரிவித்தார்.


மக்கள் கருத்து

கே.கணேசன்.Dec 21, 2021 - 09:14:55 PM | Posted IP 162.1*****

ஸ்டெர்லைட் சேவைகள் தொடர வேண்டும்.இப்பகுதி ஏழைகள் பலன் பெற வேண்டும். ஸ்டெர்லைட் பணிகளை வரவேற்கிறோம். மிக்க நன்றி. மிக்க மகிழ்ச்சி

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads







Thoothukudi Business Directory