» கல்வி / வேலை » கல்விச்செய்திகள் (தூத்துக்குடி)

தூத்துக்குடி தூய மரியன்னை கல்லூரியில் மழைநீர் சேமிப்புத் திட்டப் பணிகள்!

புதன் 22, செப்டம்பர் 2021 4:12:25 PM (IST)தூத்துக்குடி  தூய மரியன்னை தன்னாட்சி கல்லூரியில் மழைநீர் சேமிப்பு மிகவும் சிறப்பாகவும் பயனுள்ள விதத்திலும் அமைக்கப்பட்டுள்ளது. 

கல்லூரி வளாகத்தில் மொத்தம் 16 இடங்களில் மழைநீர் சேமிப்பு தொட்டிகள் அமைக்கப்பட்டுள்ளன. மழை காலத்திற்கு முன் மழைநீரை அதிகமான சேமிக்கும் பொருட்டு அனைத்து தொட்டிகளையும் தூய்மைப்படுத்தி, தூர்வாரி முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்    அனைத்தும் கல்லூரி செயலர் அருட்சகோதரி ப்ளோரா மேரி, முதல்வர்  அருட்சகோதரி லூசியா ரோஸ், அவர்களின் வழிகாட்டலின் பேரில் சிறப்பாக செய்யப்பட்டுள்ளன. 

அரசின் வழிகாட்டுதல் நெறிமுறைகள் அனைத்தும் எம் கல்லூரியில் பின்பற்றப்பட்டுள்ளன. தூர்வாரும் பணிகள் மற்றும் தூய்மைப்படுத்தும் பணிகள் எம் கல்லூரியின் நாட்டுநலப்பணித்திட்ட அணிகள் 66,67,129,130 திட்ட அலுவலர்களின் மேற்பார்வையில் செய்யப்பட்டுள்ளன.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored AdsThoothukudi Business Directory