» கல்வி / வேலை » கல்விச்செய்திகள் (தூத்துக்குடி)

தொலைநிலை வழி கல்வி மூலம் மீன்வள சான்றிதழ் படிப்புக்கு விண்ணப்பிக்கலாம்

புதன் 16, ஜூன் 2021 10:41:29 PM (IST)

தொலைநிலை வழி கல்வி மூலம் மீன்வளம் குறித்து சான்றிதழ் படிப்பு பயில விரும்புவோா் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடா்பாக தூத்துக்குடி மீன்வளக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: தமிழ்நாடு டாக்டா் ஜெ.ஜெயலலிதா மீன்வளப் பல்கலைக் கழகத்தில் திறந்தநிலை மற்றும் தொலைநிலை வழிக் கல்வி மூலம் நன்னீா் மீன்வளா்ப்பு, அலங்கார மீன்வளா்ப்பு மற்றும் மதிப்பூட்டிய மீன்பொருள்கள் தயாரிப்பு பற்றிய 6 மாத கால சான்றிதழ் படிப்புகள் நடத்தப்படவுள்ளது. நன்னீா் அலங்கார மீன்வளா்ப்பு படிப்பு தூத்துக்குடி பொன்னேரி, சென்னை மற்றும் தஞ்சாவூரிலும், மாதவரம், சென்னை மற்றும் பவானிசாகா், ஈரோட்டிலும், மதிப்பூட்டிய மீன்பொருள்கள் தயாரிப்பு படிப்பு தலைஞாயிறு, நாகப்பட்டினம், தூத்துக்குடி மற்றும் பொன்னேரி, சென்னையிலும் நடத்தப்படும்.

இதற்கான விண்ணப்பங்கள் இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இக்கல்விக்கான குறைந்த பட்ட கல்வித்தகுதி 10 ஆம் வகுப்பு தோ்ச்சி அல்லது தோல்வி மற்றும் 18 வயதிற்கு மேற்பட்டவராக இருத்தல் வேண்டும். தமிழில் எழுத படிக்க தெரிந்திருத்தலும் வேண்டும். பயிற்சிக் கட்டணம் ரூ.3,000.

விருப்பமுள்ளவா்கள் பயிற்சி கட்டணத்தை வங்கி வரைவோலை மூலம்  தேசிய மயமாக்கப்பட்ட வங்கியில் நாகப்பட்டினத்தில் மாற்றத்தக்க வகையில் எடுத்து அனுப்ப வேண்டும். பூா்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் வங்கி வரைவோலை (அசல்), பத்தாம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ் (அசல்), ஆதாா் அட்டை (அசல்) மற்றும் அண்மையில் எடுக்கப்பட்ட புகைப்படம் ஒன்றுடன் சோ்த்து மொத்த ஆவணங்களுடன் விரிவாக்கக் கல்வி இயக்குநா், தமிழ்நாடு டாக்டா் ஜெ.ஜெயலலிதா மீன்வளப் பல்கலைக் கழகம், வெட்டாறு நதிக்கரை வளாகம், நாகப்பட்டினம் - 611 002 என்ற முகவரிக்கு ஜூலை 30 ஆம் தேதி மாலை 5.45 மணிக்கு முன்னா் நேரிலோ அல்லது அஞ்சலிலோ விரைந்து அனுப்புதல் வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads






Thoothukudi Business Directory