» கல்வி / வேலை » கல்விச்செய்திகள் (தூத்துக்குடி)

தூத்துக்குடி அன்னம்மாள் கல்வியியல் கல்லூரியில் கருத்தரங்கு

திங்கள் 29, மார்ச் 2021 5:09:29 PM (IST)தூத்துக்குடி அன்னம்மாள் மகளிர் கல்வியியல் கல்லூரியில் "வாழ்க்கையை கொண்டாடுவோம்” என்ற தலைப்பின் கீழ் கருத்தரங்கு நடைபெற்றது. 

தூத்துக்குடி அன்னம்மாள் மகளிர் கல்வியியல் கல்லூரியில் தமிழ்நாடு எய்ட்ஸ் கட்டுப்பாட்டு மையத்தின் அறிவுறுத்தலின் பேரில், தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைகழகத்தின் கீழ் திருநெல்வேலி மண்டலத்திற்கு உட்பட்ட கல்வியியல் கல்லூரிகளைச் சார்ந்த செஞ்சுருள் சங்கத் திட்ட அலுவலர்களுக்கான "வாழ்க்கையை கொண்டாடுவோம்” என்ற தலைப்பின் கீழ் ஒரு நாள் பயிற்சி நடந்தது.  நிகழ்ச்சியை கல்லூரி முதல்வர் ஜாய்சிலின் சர்மிளா வரவேற்றார்.  

தூத்துக்குடி மாவட்ட எய்ட்ஸ் கட்டுப்பாட்டு அலகின் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் அமலவளன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பயிற்சியை துவக்கி வைத்தார்.  நிகழ்ச்சியில் பயிற்சியாளர்களாக ஏரல் ஆரம்ப சுகாதார மையத்தின் ICTC ஆலோசகர் சுபாஷனி மற்றும் திருச்செந்தூர் ஆரம்ப சுகாதார மைய ICTC ஆலோசகர் சாவித்ரி ஆகியோர் கலந்து கொண்டு பயிற்சி அளித்தனர்.  இதனைத் தொடர்ந்து பல்கலைக்கழக ஒருங்கிணைப்பாளர் சுப்பிரமணியன் வாழ்த்துரை வழங்கி பயிற்சியில் கலந்து கொண்ட செஞ்சுருள் சங்க திட்ட அலுவலர்களுக்கு சான்றிதழ்களை வழங்கினார்.  நிறைவாக கல்லூரி செஞ்சுருள் சங்க திட்ட அலுவலர்  சுதாகுமாரி நன்றி கூறினார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored AdsThoothukudi Business Directory