» கல்வி / வேலை » கல்விச்செய்திகள் (தூத்துக்குடி)

நாசரேத் மர்காஷிஸ் கல்லூரியில் தேசியக் கருத்தரங்கு

திங்கள் 15, பிப்ரவரி 2021 11:35:29 AM (IST)நாசரேத் மர்காஷிஸ் கல்லூரி வணிகவியல் ஆய்வுத்துறை சார்பில் இந்திய வணிக முன்னேற்றத்திற்கான உத்திகள் என்னும் பொருண்மையில் தேசியக் கருத்தரங்கம் கருத்தரங்க அறையில் நடைபெற்றது. 

வணிகவியல் துறை பாடகர் குழுவினர் இறைவணக்கப் பாடல் பாடினார்கள். பேரா. ஆன்சி எபநேசர் ஆரம்ப ஜெபம் செய்தார். கருத்தரங்க ஓருங்கிணைப்பாளர் இம்மானுவேல் நல்லதம்பி வரவேற்புரை நிகழ்த்தினார். வணிகவியல் துறைத்தலைவர் சாந்தி சலோமி தலைமை உரை வழங்கினார். கல்லூரி முதல்வர் அருள்ராஜ் பொன்னுதுரை மற்றும் துணை முதல்வர் பெரியநாயகம் ஜெயராஜ் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள். பெங்களுரு தூய ஜோசப் கல்லூரி வணிகவியல் இணைப் பேராசிரியர் கிறிஸ்டோ செல்வன் மற்றும் மதுரை அமெரிக்கன் கல்லூரி வணிகவியல் இணைப் பேராசிரியர் சாமுவேல் அன்பு செல்வன் ஆகியோர் கருத்துரையாளர்களாக கலந்து கொண்டனர். 

இரண்டாம் அமர்வில் அமர்வு தலைவராக ஜெசுரா பாலின் தலைமை ஏற்று நடத்தினார். இதில் பல்வேறு கல்லூரிகளைச் சார்ந்த பேராசிரியர்கள் மற்றும் ஆய்வு மாணவர்கள் ஆய்வுக் கட்டுரை சமர்ப்பித்தார்கள். கருத்தரங்கில் கலந்து கொண்டவர்களுக்கு சான்றிதழ் மற்றும் சிறந்த கட்டுரையாளருக்கு விருதுகள் வழங்கப்பட்டது. ஞானசுமதி நன்றி கூறினார். ஜாண்சன் பாண்டியன் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினார். கருத்தரங்கிற்கான ஏற்பாடுகளை கல்லூரி செயலர் எஸ்டிகே ராஜன், உயர் கல்வி நிலைவரக்குழு செயலர் ஜெபச்சந்திரன் மற்றும் முதல்வர் அருள்ராஜ் பொன்னுதுரை ஆகியோரின் ஆலோசனையின் படி, பேராசிரியர்கள் எபிராயீம், ஸ்வீட்டன் ஆபேத்நேகோ, ஜாபஸ்டா இன்பலதா, ஹேனா குளோரி மற்றும் வணிகவியல் துறை மாணவ மாணவிகள் சிறப்பாக செய்திருந்தனர். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored AdsThoothukudi Business Directory