» கல்வி / வேலை » கல்விச்செய்திகள் (தூத்துக்குடி)

காமராஜ் கல்லூரியில் சுபாஷ் சந்திரபோஸ் பிறந்த நாள் விழா

சனி 23, ஜனவரி 2021 9:42:27 PM (IST)காமராஜ் கல்லூரியில் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் 125ஆவது பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. 

நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் 125ஆவது பிறந்த நாள் இன்று காமராஜ் கல்லூரியில் நாட்டு நலப்பணித்திட்ட அணி 54 மற்றும் 56ன் சார்பில் கொண்டாடப்பட்டது.  அணி 54ன் அதிகாரி ஆ.தேவராஜ் வரவேற்புரையாற்றினார்.  கர்னல் சுந்தரம் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.  அவரது உரையில் நாட்டு எல்லையில் போராடும் வீரர்களுக்காக நாம் அனைவரும் பிரார்த்திக்க வேண்டும் என்றும், நேத்தாஜி நாட்டிற்காக சிந்திய ரத்த துளிகளுக்காகவும், இன்றுவரை போராடும் ஒவ்வொரு வீரரின் செயல்களுக்காகவும் நாம் நன்றி செலுத்த வேண்டும் என கூறினார்.  

அதனைத் தொடர்ந்து நேத்தாஜி சுபாஷ் சந்திரபோஸின் படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தப்பட்டது.  நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வர் து.நாகராஜன் தலைமை தாங்கினார். அணி 56ன் அதிகாரி பா.பொன்னுத்தாய் நன்றி கூறினார்.  இதனைத் தொடர்ந்து நாட்டு நலப் பணித்திட்ட மாணவ, மாணவியர்கள் கல்லூரி எதிரே உள்ள தூத்துக்குடி மாவட்ட தலைமை தபால் நிலையம் சென்று நேத்தாஜி சுபாஷ் சந்திரபோஸின் படம் பொறிக்கப்பட்ட தபால் அட்டைகளை வாங்கி அவரது பிறந்த நாளை நினைவு கூர்ந்தனர்.  


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored AdsThoothukudi Business Directory