» கல்வி / வேலை » வேலைவாய்ப்பு (தூத்துக்குடி)

அஞ்சல் ஆயுள் காப்பீடு முகவர் பணிக்கு டிச. 27க்குள் விண்ணப்பிக்கலாம்

செவ்வாய் 21, டிசம்பர் 2021 10:14:08 PM (IST)

அஞ்சல் ஆயுள் காப்பீடு மற்றும் கிராமிய அஞ்சல் ஆயுள் காப்பீடு முகவர் பணிக்கு வருகிற 27-ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

இதுகுறித்து கோவில்பட்டி முதுநிலை அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் திவ்யா சந்திரன் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: அஞ்சல் ஆயுள் காப்பீடு முகவர் பணிக்கு 1-50 வயதிற்குட் பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம். 10-ம் வகுப்பு அல்லது அதற்கு நிகரான மத்திய, மாநில அரசுகளால் அங்கீகரிக்கப் பட்ட வாரியத்தால், நடத்தப்பட்ட தேர்வில் தேர்ச்சி பெற்று இருக்க வேண்டும்.

வேலைவாய்ப்பற்ற, சுயதொழில் செய்யும் இளைஞர்கள், முன்னாள் ஆலோசகர்கள், முன்னாள் ஆயுள் காப்பீட்டு முகவர்கள், முன்னாள் ராணுவத்தினர், அங்கன்வாடி மற்றும் மகிளா மண்டல பணியாளர்கள், ஓய்வுபெற்ற பள்ளி ஆசிரியர்கள், சுய உதவிக் குழுக்களில் செயல்படுவோர், கிராமத் தலைவர் மற்றும் கிராம சபை உறுப்பினர்கள் விண்ணப்பிக்கலாம்.

தகுதியானவர்கள் நேர்முகத்தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுவர். பாலிசியின் பிரீமியம் அடிப்படையில் கமிஷன் வழங்கப்படும். பணிக்கு தேர்வு செய்யப்படும் முகவர்கள் ரூ.5 ஆயிரம் காப்பீட்டு தொகையாக, தேசிய சேமிப்பு பத்திரம் அல்லது கிசான் விகாஸ் பத்திர வடிவில், தங்கள் அருகிலுள்ள அஞ்சலகங்களில் செலுத்த வேண்டும். தங்களது ஏஜென்சி காலம் முடிக்கப்படும்போது காப்பீட்டு தொகையாக செலுத்தப்பட்ட பணமானது, தகுந்த வட்டியுடன் திருப்பி வழங்கப்படும். 

வேலைக்கான விண்ணப்பங்களை அருகில் உள்ள அஞ்சல் நிலையங்களில் பெறலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை உரிய ஆவணங்களுடன் வருகிற 27-ம் தேதிக்குள் (திங்கட்கிழமை) முதுநிலை அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் கோவில்பட்டி 627851 என்ற முகவரிக்கு பதிவஞ்சலில் அனுப்பி வைக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads





Thoothukudi Business Directory