» சினிமா » செய்திகள்

சின்னத்திரை இயக்குநரின் மனைவி தற்கொலை

வியாழன் 25, மே 2023 3:20:09 PM (IST)



சின்னத்திரை தொடர்களை இயக்கிய ஓ.என். ரத்தினத்தின் மனைவி தற்கொலை செய்து கொண்டார்.

சன் டிவியில் ஒளிபரப்பான வாணி ராணி, செவ்வந்தி போன்ற தொலைக்காட்சித் தொடர்களை இயக்கிய ஓ. என். ரத்தினம். இவர் பொள்ளாச்சியை சேர்ந்தவர். இவருடைய மனைவி பிரியா. இவர்களுக்கு இரண்டு மகன்கள் இருக்கிறார்கள். ரத்தினமும் பிரியாவும் 10 ஆண்டுகளுக்கு முன்பு காதல் திருமணம் செய்தவர்கள். 

தற்போது கோடை விடுமுறை என்பதால், பிள்ளைகள் இருவரும் சொந்த ஊருக்குச் சென்றிருக்கிறார்கள். இந்நிலையில், கணவன் - மனைவி இடையே சிறிய குடும்பத் தகராறு ஏற்பட்ட நிலையில், ஊரிலிருந்து வந்த மகன்களை அழைத்து வர ரத்தினம் பேருந்து நிலையம் சென்றிருந்த நேரத்தில், பிரியா வீட்டுக்குள் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டதாக கூறப்படுகிறது. 

மகன்களுடன் வீட்டுக்கு வந்த ரத்தினம், பிரியா தற்கொலை செய்து கொண்டிருப்பதைப் பார்த்து கதறி அழுதுள்ளார். உடனடியாக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றுள்ளார். ஆனால் அவரை பரிசோதித்த மருத்துவர்கள், அவர் இறந்துவிட்டதாகக் கூறியிருக்கிறார்கள். இது பற்றி நண்பர்களும் அதிர்ச்சி தெரிவித்துள்ளனர். 

காதலித்து, பெற்றோர் எதிர்ப்பை மீறி பிரியா திருமணம் செய்து கொண்டதாகவும், இவர்கள் மனம் ஒத்த தம்பதிகளாகவே இருந்ததாகவும, ஏதோ ஒரு சின்ன சண்டையில் இந்த விபரீத முடிவை பிரியா எடுத்துவிட்டாரே என்றும் நண்பர்கள் அதிர்ச்சி தெரிவித்துள்ளனர். பிரியாவின் மறைவுக்கு, சின்னத்திரை பிரபலங்கள் பலரும் தங்களது இரங்கலை தெரிவித்துள்ளனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Black Forest Cakes



Nalam Pasumaiyagam




Thoothukudi Business Directory