» சினிமா » செய்திகள்
ஆர்யா நடித்துள்ள காதர் பாட்சா என்ற முத்துராமலிங்கம் பட டிரைலர் வெளியானது!
சனி 20, மே 2023 5:35:35 PM (IST)
முத்தையா இயக்கத்தில் ஆர்யா நடித்துள்ள காதர் பாட்சா என்ற முத்துராமலிங்கம் திரைப்படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது.
கொம்பன், மருது, விரும்பன் உள்ளிட்ட வெற்றி படங்களை இயக்கியவர் முத்தையா. இவரது இயக்கத்தில் வரும் ஜூன் 2-ஆம் தேதி திரைக்கு வரவிருக்கும் திரைப்படம் காதர் பாட்சா என்ற முத்துராமலிங்கம். இதில் ஆர்யா நாயகனாகவும், சித்தி இதானி நாயகியாகவும் நடிக்கின்றனர்.
மேலும் படத்தில் பிரபு, பாக்யராஜ், சிங்கம்புலி, நரேன், தமிழ், மதுசூதன ராவ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைக்க, வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்கிறார். ஜீ ஸ்டுடியோஸ் மற்றும் டிரம்ஸ்டிக்ஸ் புரொடக்சன்ஸ் நிறுவனங்கள் இணைந்து படத்தை தயாரிக்கிறது. முத்தையாவின் முந்தைய படங்கள் போலவே இந்த திரைப்படமும் தென்மாவட்ட பின்னணியில் எடுக்கப்பட்டு இருக்கிறது. இந்த நிலையில் படத்தின் டிரைலரை படக்குழு வெளியிட்டுள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

புதுப்பொலிவுடன் மீண்டும் வெளியாகும் ரஜினியின் எந்திரன்!
வியாழன் 1, ஜூன் 2023 5:19:32 PM (IST)

கிராஃபிக் டிசைனரை கரம்பிடித்தார் கே.பி.ஓய். தீனா!!
வியாழன் 1, ஜூன் 2023 5:14:18 PM (IST)

பிரபுதேவாவின் புதிய படம் டைட்டில் அறிவிப்பு!
வியாழன் 1, ஜூன் 2023 12:05:17 PM (IST)

படப்பிடிப்பில் மின்னல் தாக்கி விபத்து: அதிர்ஷ்டவசமாக 5 லைட்மேன்கள் உயிர் தப்பினர்
வியாழன் 1, ஜூன் 2023 12:03:00 PM (IST)

சர்வதேச இந்திய திரைப்பட விழா: கமல்ஹாசன், மாதவனுக்கு விருது!!
செவ்வாய் 30, மே 2023 12:54:59 PM (IST)

நான் ஆரோக்கியமாக இருக்கிறேன் : வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த சுதாகர்
சனி 27, மே 2023 3:41:24 PM (IST)
