» சினிமா » செய்திகள்

ரஜினி பட போஸ்டரை கலாய்த்த ப்ளூ சட்டை..!!

செவ்வாய் 9, மே 2023 4:54:30 PM (IST)

"ஏன்டா இது ஒரிஜினல் போஸ்டர்னு சொல்ல மாட்டீங்களா?" என லால் சலாம் படத்தில் ரஜினிகாந்தின் போஸ்டரைப் பார்த்து ப்ளு சட்டைமாறன் பங்கமாக கிண்டலடித்துள்ளார்.

3, வை ராஜா வை படத்தை இயக்கிய ஐஸ்வர்யா தற்போது லால் சலாம் படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தில் விஷ்ணுவிஷால், விக்ராந்த் ஆகியோர் நடித்து வருகின்றனர். கிரிக்கெட் விளையாட்டை மையமாக வைத்து உருவாகி வரும் இப்படத்தை லைகா நிறுவனம் தயாரித்து வருகிறது. இப்படத்திற்கு ஏஆர் ரஹ்மான் இசையமைத்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு சென்னை, திருவண்ணாமலையில் நடைபெற்று நிலையில், தற்போது படப்பிடிப்பு மும்பையில் நடந்து வருகிறது.

இதில் விஷ்ணுவிஷால், விக்ராந்த்தின் பகுதியின் படப்பிடிப்பு முடிந்த நிலையில், கௌரவ தோற்றத்தில் வரும் ரஜினிகாந்தின் பகுதி மட்டும் படமாக்கப்பட வேண்டி உள்ளதாக கூறப்படுகிறது. படப்பிடிப்பை விறுவிறுப்பாக முடித்து விட்டு சுதந்திர தினத்தை முன்னிட்டு இப்படத்தை ஆகஸ்ட் 10ந் தேதி வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இதையடுத்து, நேற்று லால் சலாம் படத்தில் ரஜினிகாந்த் மொய்தீன் பாய் என்கிற கதாபாத்திரத்தில் நடிப்பதாக குறிப்பிட்டு, அவரின் தோற்றம் அடங்கிய பர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டு இருந்தது. இந்த போஸ்டரைப் பார்த்த ரஜினியின் ரசிகர்கள் இணையத்தில் மிகபெரிய அளவில் டிரெண்டாக்கினார்கள். இப்படத்தில் ரஜினியின் காட்சி சுமார் 20 நிமிடம் இருக்கும் என்ற தகவல் வெளியாகி உள்ளதால், சூப்பர் ஸ்டாரின் ரசிகர்கள் குஷியில் உள்ளனர்.

இந்நிலையில், சினிமா விமர்சகரான ப்ளூ சட்டை மாறன் இந்த போஸ்டரை கிண்டலடிக்கும் வகையில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், ஏன்டா இது ஒரிஜினல் போஸ்டர்னு சொல்ல மாட்டீங்களா.. ரெண்டு நாளா இது எவனோ ட்ரோல் பண்றதுக்கு போட்டதுனு நெனச்சி போய்ட்டு இருந்தேன்... போஸ்டருக்கு கூட தலைவர் தேற மாட்டார் போலயே.. இவனுக எத நம்பி படத்த எடுக்குறானுக" என ரஜினி ரசிகர்களை வம்பு இழுத்துள்ளார். இதைப்பார்த்து, ரஜினிகாந்தின் விஸ்வாசிகள், ஏகத்திற்கு டென்ஷனான ப்ளூ சட்டை மாறனுக்கு சரியான பதிலடி கொடுத்து வருகின்றனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Black Forest Cakes



Nalam Pasumaiyagam



Thoothukudi Business Directory